உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; கைதான நபருக்கு மாவுக்கட்டு!

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; கைதான நபருக்கு மாவுக்கட்டு!

சென்னை: சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கைது செய்யும்போது தப்பி ஓடி விழுந்ததில் இடது கால் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.சென்னை கிண்டியில் செயல்படும், அண்ணா பல்கலையில், 19 வயது பெண், மெக்கானிக்கல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பல்கலை விடுதியில் தங்கி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y50yi8g8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 23ம் தேதி நடைபயிற்சி முடித்த பிறகு, இரவு 8:00 மணியளவில், பல்கலை வளாகத்தில், நெடுஞ்சாலை ஆய்வகம் கட்டடம் பின்புறம் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர், அச்சுறுத்தி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.மாணவி தனக்கு நடந்த கொடுமை குறித்து, போலீஸ் கமிஷனர் அருணிடம், நேற்று முன்தினம் மாலை புகார் அளித்தார். கோட்டூர்புரம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாதேவி தலைமையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக, நடைபாதை பிரியாணி வியாபாரி ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தி.மு.க., நிர்வாகி என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். ஞானசேகரன் தி.மு.க., நிர்வாகி என்பது உண்மையல்ல; எது நடந்தாலும் தி.மு.க.,வை குறை கூறுவது அண்ணாமலையின் இயல்பான குணம் என அமைச்சர் கோவி.செழியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கைது செய்யும்போது தப்பி ஓடி விழுந்ததில் இடது கால் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர். கை, காலில் முறிவு ஏற்பட்டு உள்ளதால் ஸ்டான்லி மருத்துவமனையில் ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து, சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

baala
ஜன 20, 2025 09:43

இந்த மாவு கட்டு உண்மையானதா


SRITHAR MADHAVAN
டிச 27, 2024 15:59

பேரிடர் ஆட்சி மாதிரி தமிழகத்தில் எப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாற்று நாளிலும், ஏன் ஒவ்வொரு நாளும் மக்கள் பலாத்காரம், திருட்டு, கொள்ளை ஆகியவற்றை ஊடகங்களில் இருந்து கேட்கிறோம். பேரிடர் மாதிரி அரசாங்கத்திற்கு பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று தமிழக மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.


SRITHAR MADHAVAN
டிச 27, 2024 15:45

கை, கால் தவிர உடலின் எந்தப் பகுதியிலும் கட்டுகள் உள்ளதா...


JAGADEESANRAJAMANI
டிச 26, 2024 17:34

உண்மையான மாவுக்கட்டுபோல் தோன்றவில்லை. சுகமாக சாய்ந்துகொண்டு IRUKIRAN.


Mani . V
டிச 26, 2024 13:50

அப்பாடா இப்படி ஒரு பொய்க்கட்டைப் போட்டு மக்களை திசை திருப்பி விடலாம். ஒரு வாரம் இந்த மக்கள் பேசுவார்கள். அப்புறம் வேறு பிரச்சினை வந்தவுடன் இதை மறந்து விடுவார்கள். வேறு பிரச்சினை எதுவும் வரவில்லையென்றால், நாமே கிளப்பி விட வேண்டியதுதான்.


Chandra
டிச 26, 2024 13:02

கால் வேண்டாம் .. ப்ளீஸ் கண்களை எடுத்திருங்க சார்.


muthu kumar
டிச 26, 2024 12:46

என்ன விசாரிக்க போறீங்க எப்படியும் அதுக்குள்ள வாழ்ந்து முடிச்சிடுவாரு


Kanns
டிச 26, 2024 11:39

Also Arrest SexHungry College-School Girls-Boys Under POCSO& AntiSociety Public-Nuisance Laws. IF NOT Sack Police& Magistrates being Biased& Unfit


Vijay
டிச 26, 2024 11:33

திமுககாரர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு


Vijay
டிச 26, 2024 11:32

மதத்தை தாண்டி யோசிக்காத சிறுபான்மையினர், தங்கள் குடும்ப நலத்தை மட்டுமே யோசிக்கும் சுயநல அரசு ஊழியர்கள், எலும்பு துண்டிற்காக ஜால்ரா அடிக்கும் ஊடகங்கள், பணத்திற்கு ஓட்டை விற்கும் கும்பல், மற்றும் சூடு சுரணை இல்லாத ஹிந்துக்கள் இருக்கும் வரை திமுக ஆட்சியில் இருக்கும். இது நம் தலை விதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை