உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் திறந்துள்ளார். தற்போது மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரியனார் கோவில் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, நான்கு நாட்களுக்கு முன்பாக, கடந்த 16ம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்தார். ஆனால் கட்டடம் திறக்கப்படுவதற்கு முதல் நாளே, இரண்டு அறைகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து, அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்திருக்கிறார்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h69tvt93&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வர் திறப்பு விழாவிற்கு பிறகு, தற்போது, மீண்டும் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. ஒட்டு மொத்தமாக பேட்ச் வொர்க்கில் கட்டப்பட்ட தரமற்ற கட்டிடத்தைத்தான் முதல்வர் திறந்து வைத்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் ஊராட்சி மன்ற ஊழியர்கள் யாரும் அந்த அறையில் இல்லாததால், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் எப்போது கட்டடம் இடிந்து விழுமோ என்ற பயத்தில், இனி எப்படி ஊழியர்கள் அங்கிருந்து பணியாற்ற முடியும்? உடனடியாக, தரமற்ற முறையில் கட்டடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு சார்பில் இந்தக் கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த பிறகே, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

என்றும் இந்தியன்
ஜூன் 20, 2025 17:54

கட்டடம் திறக்கப்படுவதற்கு முதல் நாளே, இரண்டு அறைகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து, ???இதில் தவறு ஒன்றுமில்லை. கான்ட்ராக்டர்களிடமிருந்து திருட்டு முரடர்கள் கயவர்கள் கழகம் 45% கமிஷன் contract price ல் எடுத்துக்கொள்கின்றனர் அவர்களது கமிஷனாக அப்போ கட்டிடம் அப்படித்தான் கட்டப்படும்.


Chandru
ஜூன் 20, 2025 16:24

Probably Rs.200 oopis may come with a statement that it was due to unprecedented summer in June this year. As long as we have illiterate masses who cant even differentiate between good and bad and courts which supports only dmk these will continue. Annamalai will come on and off and will vanish. He only make talks but does nt act


Mahendran Puru
ஜூன் 20, 2025 15:20

வாய் கிழிய பேசும் அண்ணாமலைக்கு கீழடி நாகரிகம் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளில் கீழ்த்தரமான அரசியல் செய்யும் பாஜக மத்திய அரசை விமரிசிக்க வாய் வரவில்லையே. முதலில் தமிழனாய் இருப்பா, அப்புறம் சங்கியாகலாம்.


Selvam
ஜூன் 20, 2025 20:03

இதற்கு இது பதில் இல்லையே.. தவறு நடந்தால் தவறை மட்டும் பார்ப்பது நல்லது அதற்குள் கட்சியை பார்க்காதீர்கள்..


panneer selvam
ஜூன் 20, 2025 21:17

It is the typical DMK formula . If you point our defects of DMK activities , immediately DMK will jump with statement , that others are also doing the same , why do not first blame others . DMK is notorious for this kind of diversion tactics


SJRR
ஜூன் 20, 2025 12:16

கட்டிட ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை நான் ஆமோதிக்கிறேன். அதேசமயம் அந்த தரமற்ற கட்டிடத்தை திறந்து வைத்த மாண்புமிகு முதல்வரை என்ன செய்வது? என்னுடைய ஆட்சிக்காலத்தில் இத்தனை நலத்திட்டங்களை தொடங்கி வைத்தேன் என்று கணக்கு காட்டுவதற்கு செய்தல் இப்படித்தான்.


Ramesh Sargam
ஜூன் 20, 2025 12:10

திமுக ஆட்சியில் இப்படி எல்லாம் நடக்காவிட்டால்தான் ஆச்சரியமாக பார்க்கவேண்டும்.


babu
ஜூன் 20, 2025 11:55

இப்டியே கதற வேண்டிதான்....


N Sasikumar Yadhav
ஜூன் 20, 2025 12:10

அவர் கதறுவது இருக்கட்டும் நீங்க எப்போதும்போல பணத்தை வாங்கி கொண்டு விஞ்ஞானரீதியான ஊழல்வாதிகளுக்கு ஓட்டுப் போட்டு உங்க மானங்கெட்ட கடமையை நிறைவேற்றுங்கள்


நாஞ்சில் நாடோடி
ஜூன் 20, 2025 13:25

21 ம் பக்க கதாநாயகனை தலைவனாக கொண்டவர்களுக்கு மானம் ஏது ?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 20, 2025 11:14

உக்ரேன் ..ரஷ்ய போரின் அதிர்ச்சியில் கட்டிடம் இடிந்துவிட்டது ..சண்டையென்றால் கட்டிடம் இடியத்தான் செய்யும்


PATTALI
ஜூன் 20, 2025 13:05

செய்த ஊழலுக்கு விஞ்சானபூர்வமான பதிலா?. இதற்கெல்லாம் கண்டிப்பாக ஒருநாள் கடவுளின் தீர்ப்பு வரும்.


sivakumar Thappali Krishnamoorthy
ஜூன் 20, 2025 11:05

மக்கள் நலனுக்கா கட்டியது கிடையாது . எப்படி ஆட்டைய போடலாம் என்கிற நோக்கம் மட்டுமே எல்லா கட்சிகளும் செய்கிறது.. தி மு க எப்போதும் ஒரு படி மேல் .


அசோகன்
ஜூன் 20, 2025 10:52

10% காசுக்கு மட்டும் வேலை செய்து விட்டு 90% பணத்தை கொள்ளை அடித்தால் கட்டிடம் இப்படித்தான் இருக்கும்.......இதுதான் உலக மாடல்


நாஞ்சில் நாடோடி
ஜூன் 20, 2025 10:50

கருணாநிதி குடுமபத்துக்கு முகவுரை எழுதியது அண்ணாதுரை. அதே கருணாநிதி குடுமபத்துக்கு முடிவுரை எழுதிக்கொண்டிருப்பது அண்ணாமலை ...


Ganapathy Subramanian
ஜூன் 20, 2025 12:18

கேட்பதற்கு படிப்பதற்கு நன்றாக இருக்கிறது, நடந்தால் பிரமாதமாக இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை