உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் ; அண்ணாமலை ஆவேசம்

முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் ; அண்ணாமலை ஆவேசம்

கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை;கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hy9bgf1e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது.இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நயினார் நாகேந்திரன் அறிக்கை; கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே நமது பொழுது விடிகிறது. எந்த ஊரில் எந்தப் பெண்ணின் வாழ்வு சூறையாடப்பட்டதோ என்ற பயத்துடனேயே செய்தித்தாள்களை நாம் புரட்ட வேண்டியிருக்கிறது. வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் போனாலும் சரி பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள். 'தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்” என வெட்டி வசனம் பேசும் திமுகவின் ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர். இந்த அவலங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் ஸ்டாலினோ, கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா?, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

Prasanna Krishnan R
நவ 04, 2025 09:54

எல்லா பெண்களுக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து உரிமம் பெற்ற துப்பாக்கியை வழங்குவது நல்லது.


சேகர்
நவ 03, 2025 20:20

உடனடியாக ஒரு கோடி போலீஸ் ஆட்களை வேளைக்கு சேர்த்து, ஒரு பெண்ணுக்கு ஒரு காவலர் என்ற முறையில் அவர்கள் வீடு வாசலில் நிறுத்த வேண்டும். இளம் பெண்கள் வெளியே போகும் பொது , துணைக்கு இவர்களும் போயி வர வேண்டும். மூன்று ஷிப்ட்டு போட்டு பாத்து காக்க வேண்டும்....


JAYACHANDRAN RAMAKRISHNAN
நவ 04, 2025 11:03

இது போன்ற கொடிய செய்திகளை கூட கிண்டல் கேலி செய்யாமல் இருந்தால் தான் அதிசயம்.


Aravind Srinivasagopalan
நவ 03, 2025 19:09

சமூக விரோதிகளே ஆட்சியாளர்களே தி. மு. க வினராக இருக்கிறார்கள், வெளியிலிருந்து வேறு நபர்கள் சமூக விரோதிகளாக செயல்பட எப்படி தி. மு. க அனுமதிக்கும்


Raj S
நவ 03, 2025 18:48

வெக்கம், மானம், சூடு, சொரணை எல்லாத்தையும் விட்டா தான் அரசியலுக்கு வரமுடியும்னு அவரோட வாயாலேயே சொல்லி அதுக்கு சரியான ஆளு இவருதான்னு சொல்லி கூட்டிகிட்டு வந்திருக்காங்க... அவர்கிட்ட போய் இதெல்லாம் எதிர் பார்க்கலாமா?


என்னத்த சொல்ல
நவ 03, 2025 18:35

நடந்த கொடூர சம்பவத்தை காவல்துறை விசாரிக்கிறது. விரைவில், குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என நம்புவோம். ஒரு கேள்வி, கோவையில் நூற்றுக்கணக்கான பாதுகாப்பான பகுதி உள்ளது. இவர்கள் எதற்கு ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு நடு ராத்திரி சென்றார்கள்.


ஆசாமி
நவ 03, 2025 19:23

ஏன் ஆள் இல்லாத பகுதின்னா அரசாங்கம் அங்கு செல்லுபடியாகாதா ? Shame on you for victim blaming.


பேசும் தமிழன்
நவ 03, 2025 19:23

இப்போதும் குற்றவாளிகளை கண்டிக்காமல்.... முட்டு கொடுக்கும் செயலை தானே செய்கிறீர்கள்.... ஒரு திருடன் நகையை பறித்து கொண்டு போய் விட்டான் என்று புகார் கொடுக்க வந்தால்.... திருடனை கண்டிக்காமல்..... பிடிக்காமல்.... நீங்கள் நகையை போட்டு கொண்டு ஏன் வந்தீர்கள் என்று கேட்பது போல் இருக்கிறது.....


JAYACHANDRAN RAMAKRISHNAN
நவ 04, 2025 10:58

பிஞ்சு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு அந்த குழந்தையின் தவறுதான் என்று குற்றவாளிக்கு முட்டு கொடுத்த கலெக்டர்கள் வாழும் தமிழகத்தில் இது போன்ற கேள்விகள் தான் எதிர்பார்க்க முடியும்.


V RAMASWAMY
நவ 03, 2025 17:31

வெட்கமா? கிலோ என்னவிலை? அப்படி வெட்கப்படக்கூடியவர்களென்றால் அரசு அமைத்த முதல் ஆண்டிலேயே வெட்கப்பட்டிருக்கவேண்டும்.


Gokul Krishnan
நவ 03, 2025 17:17

பாலியல் குற்றவாளிகள் மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பிஜேபி தலைவர்கள் தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் நடக்கும் பாலியல் வன்முறை குறித்து வாய் திறக்க மாட்டார்கள். அக்டோபர் மாதம் 22 தேதி மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் 28 வயது ஆன பெண் மருத்துவர் போலீசு அதிகாரியால் பாலியல் வன்முறைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். அங்கு உள்ள மருத்துவர்கள் பெரும் போராட்டம் நடத்திய பின் அந்த காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இது குறித்து கருத்து தெரிவிக்கலாமே


Rahim
நவ 03, 2025 18:44

சரியான கேள்வி..


N S
நவ 03, 2025 16:59

கையாலாகாத நிலையில் காவல்துறைக்குப் பொறுப்பான "அப்பா" வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார். சிகை அலங்காரம் சரியாக செய்யவேண்டிய நிலமை. பொது இடத்தில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்கணும்.


duruvasar
நவ 03, 2025 16:29

குனிஞ்சி குனிஞ்சி தரை தட்டிடுச்சு . இனிமே குழி வெட்டினாதான் பர்த்தரா குனியமுடியும்.


Ravichandran
நவ 03, 2025 16:26

Punishment is an action after the incident, and it is of no use to the victim. I accept that punishment should be severe for those who indulge in this kind of act. But our president is not signing the death punishment, and hence criminals are fearless. Hence, it is important to act proactively by controlling our kids to avoid regret.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை