உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் நேரு துறையில் ரூ. 1,905 கோடி ஊழல்: அண்ணாமலை திடுக்கிடும் புகார்

அமைச்சர் நேரு துறையில் ரூ. 1,905 கோடி ஊழல்: அண்ணாமலை திடுக்கிடும் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: அமைச்சர் கே.என். நேருவின் துறையில் ரூ. 1,905 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.கோவையில் அவர் அளித்த பேட்டி; அக்.2025ல் அமைச்சர் நேருவின் துறையில் பணி நியமனத்துக்காக, ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பதை சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை பொறுப்பு டிஜிபிக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில் 150 பேரை குறிப்பிட்டு வாட்ஸ் அப் உரையாடல்கள், பணம் எப்படி கைமாறி உள்ளது என்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

வாட்ஸ் அப் உரையாடல்

அது சம்பந்தமாக ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. டிச. 3ம் தேதி மீண்டும் ஒருமுறை பொறுப்பு டிஜிபிக்கு அமலாக்கத்துறை 258 பக்கம் கடிதம் அனுப்பியது. நகராட்சி நிர்வாகத்தின் குடிநீர் வழங்கல் துறையில், 1020 கோடி ரூபாய் ஊழல் என்பதற்கான ஆவணத்தை இணைத்திருந்தனர்.

வாட்ஸ் அப் உரையாடல், ஹவாலா பணத்தை துபாய்க்கு அனுப்பியது போன்ற விவரங்களையும் தந்துள்ளனர். நிறைய வாட்ஸ் அப் உரையாடல்களில் கட்சி நிதி என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த விவரத்தையும் அமலாக்கத்துறை குறிப்பிட்டு இருக்கிறது.

'இதில் உண்மை இல்லை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என்று நேரு எளிதாக கடந்து சென்றுள்ளார். மறுபடியும் சொல்கிறோம், 888 கோடி ரூபாய் இன்ஜினியர் பதவி நியமனத்திலும், நேரு துறையில் ஒப்பந்ததாரர் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கொடுத்துள்ளனர். இன்று நேரு துறையில் நடந்துள்ள அடுத்துக்கட்ட குளறுபடி. ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறையில். அதில் ஊராட்சி செயலாளருக்கான பதவி நியமனம் நடைபெற்று வருகிறது. இதில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடக்கும். நியாயமாக இன்று அல்லது நாளைக்கு நேர்காணல் நடந்திருக்க வேண்டும். ஆனால் நேற்று மாலை இண்டர்வியூ கேன்சல் என்று வருகிறது.

தெரியவில்லை

யார் யார் எல்லாம் இண்டர்வியூவுக்கு தகுதியானவர்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டு உள்ளனர். என்ன அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டனர் என்று யாருக்குமே தெரியவில்லை. தேர்வானவர்களை விட, தேர்வாகாமல் உள்ள நபர்கள் தகுதியான நபர்களாக உள்ளனர்.

பொறுப்பு டிஜிபி

ஆனால் முதல்வர் எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. நேருவும் எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இன்றைக்கு பொறுப்பு டிஜிபிக்கு பொறுப்பு டிஜிபி போட்டுள்ளனர். அதனால் யாருமே எப்ஐஆர் பதிவு செய்ய தயாராக இல்லை. எஸ்ஐஆரை பொறுத்தவரை வாக்காளர் பட்டியலில் 80 லட்சம் பேரை நீக்க வேண்டும் என்று சொல்லி இருந்தோம். இன்று தேர்தல் கமிஷன் கொடுத்த ஆவணத்தின் படி 77 லட்சம் பேரை நீக்கி உள்ளனர். வரைவு பட்டியலுக்கு முன்பாக தினமும் கொடுக்கும் செய்தி அறிக்கை அடிப்படையில் இதை தேர்தல் கமிஷன் கொடுத்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் இந்த பட்டியலை கொண்டு தான் வாக்காளர்களை நாம் சந்தித்துள்ளோம்.

அவதூறு

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்க கோரி 120 எம்பிக்கள் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர். இந்திய அரசியல் சரித்திரத்தில் முதல் முதலாக ஒரு நீதிபதி தீர்ப்பு கொடுத்ததற்காக பதவி நீக்க நோட்டீஸ் கொண்டு வந்துள்ளனர். அந்த நோட்டீசில் திமுகவினர் பல அவதூறுகளை பரப்பி உள்ளனர். இவ்வளவு பொய்களை பேசியதை பார்லி.யில் உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் சுவாமிநாதன், பெரிய வழக்குகள் 75000 வழக்குகளை தீர்த்து வைத்துள்ளார். அப்படியிருந்தும், திமுகவினர் நமது நீதித்துறையின் நடவடிக்கையை கேலிக்கூத்தாக்கி இருக்கின்றனர். நீதியரசர்கள் இன்றைக்கு இங்கே நேர்மையான முறையில் பணியாற்றுவதற்கு இடம் இல்லை. திமுக ஆட்சியாளர்கள் எல்லாவிதமான பிரச்னைகளை உருவாக்குகின்றனர்.இவ்வாறு அண்ணாமலை பேட்டியளித்தார்.

பேட்டி

அதன் பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது;தமிழக அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் இணைய வேண்டும் என்பதை முடிவு செய்ய தலைவர்கள் உள்ளனர். தமிழகத்தில் என்டிஏ கூட்டணி தலைவராக இபிஎஸ் இருக்கிறார். தமிழக பாஜ தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளார். எனவே சரியான நேரத்தில் இவர்கள் சொல்வார்கள். கூ.ட்டணிக்குள் யார் வரவேண்டும், வரவேண்டாம் என்று இவர்கள் பேசுவார்கள். எல்லோருக்கும் தேவை ஒரு வலிமையான தேசிய ஜனநாயக கூட்டணி. அது எப்படி இருக்க வேண்டும் என்று தலைவர்கள் சொல்வார்கள். அமைச்சர் கே.என். நேருவுக்கு 3 கேள்விகள், அமலாக்கத்துறை கேட்டதை நான் கேட்கிறேன். அடிப்படை எப்ஐஆர் கூட போடவில்லை. எல்லாவற்றிலும் வெளிப்படையான ஊழல். 2026ல் மக்களின் மனநிலை மாறும். இவர்கள்(திமுக) ஆட்சி போய்விடும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Kasimani Baskaran
டிச 13, 2025 06:28

உடன்பிறப்புகள் இங்கு வந்து அதிகாலை வாந்தி எடுத்துச நாஸ்தி செய்து விட்டு சென்று இருக்கிறார்கள். விசாரணை அமைப்புக்கள் உள்ளே வரவேண்டும் என்றால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். அது இல்லாமல் அவர்களால் உள்ளே வரமுடியாது.


சிட்டுக்குருவி
டிச 12, 2025 23:32

உங்களுக்கு பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதைத்தவிர வேறு ஒன்றும் தெரியாதா ? லோக் அயுக்தாவில் விசாரிக்க மனுகொடுங்கள் .உயர்நீதிமன்றம் சென்று ஊழலோழிப்புத்துறைக்கு உத்திராவிட கோருங்கள் .அதுதான் ஆக்கபூரவமான நடவடிக்கை .


Oviya Vijay
டிச 12, 2025 23:14

நுணலும் தன் வாயால் கெடும் எனும் பழமொழிக்கு மிகச்சிறந்த உதாரணம் நீர்... ஆனாலும் இன்னமும் அதை நீங்கள் உணரவில்லை... பேசாத பேச்சாய்யா பேசுன என்பது போல் கூட்டணி அமைவதற்கு நீங்கள் பேசிய முந்தைய பேச்சுக்கள் முட்டுக்கட்டையாக இருக்க, அதிமுகவின் நிர்பந்தத்தில் பதவியை விட்டு மேலிடத்தால் நீங்கள் தூக்கியெறியப்பட்டீர்... அதுவும் உங்களுக்கு அசிங்கமாகப் படாமல் துடைத்துக் கொண்டு போய் விட்டீர்கள்... டிஎம்கே ஃபைல்ஸ் வெளியிட்ட போது அதிமுக முறைகேடுகளையும் வெளியிடுவேன் என்று கூறிய உங்கள் திருவாய்க்கு இப்போது எது உங்களைத் தடுக்கிறது எனத் தெரியவில்லை. சொல்லியபடி அதிமுக முறைகேடு தகவல்களையும் வெளியிட்டிருக்க வேண்டியது தானே... அதனை வெளியிடாமல் மௌனம் காப்பதன் மூலமாக நீங்களும் யோக்கியன் இல்லை காரியக்கள்ளன் என்பதை தமிழக மக்களுக்குப் புரிய வைத்து விட்டீர்கள்... அண்ணா நான் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க என்று நீங்கள் கூறியபோதெல்லாம் நோட்ஸ் எடுத்து நோட்ஸ் எடுத்து நிருபர்களுக்கு பல குயர் நோட்டுக்கள் தீர்ந்தது தான் மிச்சம்... ஆனால் நீங்கள் கூறியது ஒன்று கூட நடந்ததேயில்லை... ஆனால் கட்சிக்குள்ளேயே தனித்து விடப்பட்டிருக்கும் உங்களுக்கு மட்டும் எதுவுமே அவமானமாக அசிங்கமாக தோன்றவேயில்லை... ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் சார்ந்திருக்கும் ஒரு கட்சியின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் உங்களால் தமிழக அரசியலில் நீடித்து நிலைத்திருக்க முடியாது... பேச்சைக் குறைப்பீர்களேயானால் உங்களுக்கு நலம். இல்லையேல் அரசியலில் காணாமல் போவீர்...


vivek
டிச 13, 2025 06:43

ஓவியமே. ECG x-ray தேவைப்படும் ...இதயம் பத்திரம்


Priyan Vadanad
டிச 13, 2025 06:59

இப்போது என்ன வாழ்கிறது?


சுலைமான்
டிச 12, 2025 21:06

மோடியின் அரசு என்ன செய்கிறது.....


Priyan Vadanad
டிச 12, 2025 21:00

காகிதத்தில் கப்பல் செய்து கடலலையில் ஓடவிட்டேன். மணல் மீது வீடுகட்டி மலை நீரில் நனையவிட்டேன். மலை நீரில் நனையவிட்டேன். y


Priyan Vadanad
டிச 12, 2025 20:54

ரொம்ப திடுக்கிட்டேன்.


vivek
டிச 12, 2025 21:41

ஏன் இருநூறு வரவில்லையா....வரும். திடுக்கிட வேண்டாம்


Ramesh Sargam
டிச 12, 2025 20:40

திரு அண்ணாமலை அவர்கள் ஆளும் திமுக கட்சி அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் பல துறைகளில் நடக்கும் ஊழல்களை பட்டியலிட்டுகொண்டே போகிறார். ஆனால் இதுவரையில் ஒரு ஊழல்வாதியும் சட்டத்தினால் தண்டிக்கப்படவில்லை.


Ramesh Sargam
டிச 12, 2025 20:38

திரு அண்ணாமலை அவர்கள் ஆளும் திமுக கட்சி அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் பல துறைகளில் நடக்கும் ஊழல்களை பட்டியலிட்டுகொண்டே போகிறார். ஆனால் இதுவரையில் ஒரு ஊழல்வாதியும் சட்டத்தினால் தண்டிக்கப்படவில்லை.


Easwar Kamal
டிச 12, 2025 20:33

நேரு மீது ஊழல் புகார் இல்லை என்றால் தான் அதிசயம். இப்படியே பேசி கொண்டு இருக்காமல் எப்படி செந்தில் பாலாஜியை கூண்டுக்குள் அடைத்தீர்களோ அதை போன்று நேருவையும் இரும்பு கரம் கொண்டு அடைக்க வேண்டும். இ


Enrum anbudan
டிச 12, 2025 20:30

நீங்களும் சொல்லிகிட்டே இருக்கீங்க ஆனா ஒன்னும் நடக்கலை. ஒருத்தனுக்கு தண்டனையும் கிடைக்கலை கொள்ளை அடித்த சொத்து பரிமுதலும் நடக்கலை. பிஜேபியும் வெற்று விளம்பரம் தான் செய்கின்றதோ என்று தோன்றுகின்றது. நல்லா அரசியல் பண்றீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை