உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலையா... நயினார் நாகேந்திரனா? நாளை தமிழக பா.ஜ., தலைவர் தேர்தல்

அண்ணாமலையா... நயினார் நாகேந்திரனா? நாளை தமிழக பா.ஜ., தலைவர் தேர்தல்

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு, இன்று விருப்ப மனு பெறப்படுகிறது. நாளை(ஏப்.,12) புதிய தலைவர் அறிவிக்கப்பட உள்ளார். அமைப்பு ரீதியாக தமிழக பா.ஜ.,வில், 67 மாவட்டங்கள் உள்ளன. அக்கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை, கடந்த ஆண்டு செப்டம்பரில் துவங்கியது. அதைத் தொடர்ந்து, நவம்பரில் கிளை அளவில் தேர்தல் நடத்தி, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kyil160l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தாமதமானது

இந்தாண்டு ஜனவரியில், புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். மாநில தலைவர் பதவிக்கு, ஜனவரியில் தேர்தல் நடத்தப்பட இருந்தது. டில்லி சட்டசபை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் தாமதமானது. அண்ணாமலையே மாநில தலைவராக மீண்டும் நியமிக்கப்பட இருப்பதாக பா.ஜ.,வினர் கருதிய நிலையில், அ.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், மத்திய அமைச்சர் அமித் ஷா களமிறங்கினார். அண்ணாமலையை டில்லிக்கு அழைத்து பேசிய மேலிடத் தலைவர்கள், 'பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு உடன்பட்டால், நீங்கள் மாநில தலைவராக தொடரலாம்; இல்லையெனில், புதிய தலைவர் நியமிக்கப்படுவார்' என, தெரிவித்தனர். இதனால், அண்ணாமலை தலைவராக தொடர்வாரா அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விடை காணும் வகையில், மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடக்கிறது. இந்த தேர்தலை நடத்த, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னை வருகிறார்.

இதுகுறித்து, தமிழக பா.ஜ., துணைத் தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்ப மனுக்களை, கட்சியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், இன்று மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை விருப்ப மனுவை, மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

அரசியல் நிலவரம்

தமிழகத்திற்கான தேசிய தேர்தல் அதிகாரியும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி முன்னிலையில் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, நாளை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:

சென்னை வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா, இன்று மாலை வரை சென்னையில் இருப்பார். அமித் ஷா வருகைக்கும், மாநில தலைவர் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. கட்சி தலைவர்களை சந்திக்க அமித் ஷா வருகிறார். கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரங்களை கேட்டறிவார்.நான்கு நாட்களுக்கு முன், பீஹாருக்கு சென்றிருந்தார். அங்கு, கட்சியின் செயல்பாடு குறித்து, தலைவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அதேபோல் தான் தமிழகத்திலும் இருக்கும்.

உட்கட்சி விவகாரம்

தமிழக அரசின் மசோதாக்களை, கவர்னர் நிலுவையில் வைத்தது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியமானது. கவர்னர் எடுக்கும் முடிவில் உள்ள காலதாமதம் குறித்துதான் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், மாநில அரசை, கவர்னர் கேள்வி கேட்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. எனவே, இது, கவர்னருக்கு பின்னடைவு இல்லை. பா.ம.க.,வை பொறுத்தவரை உட்கட்சி விவகாரம்; கருத்து கூற ஒன்றுமில்லை. பா.ஜ.,வின் தயவுக்காக, அ.தி.மு.க., தன் ஆதரவை தமிழக மக்களிடம் இழந்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அவர், தி.மு.க., கூட்டணியில் சந்தோஷமாக இருக்கிறாரா என யோசிக்க வேண்டும். பட்டியலின மக்களுக்காக திருமாவளவன் போராடுகிறார் என்றால், அந்த மக்களுக்கு எதிராக நடக்கும் தொடர் குற்றங்களை, அவர் ஏற்றுக்கொள்கிறாரா? இவ்வாறு அவர் கூறினார்.

'10 ஆண்டு' குழப்பம்

மாநில தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பில், 'மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும், குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர்தான், மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார்' என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையால், ஏற்கனவே தலைவராக உள்ள அண்ணாமலை, தலைவராக விரும்பும் நயினார் நாகேந்திரன் ஆகியோரால் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றி, மாநில நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, தேவைக்கேற்ப விதிகளை தளர்த்த, கட்சி தலைமைக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

பல்லவி
ஏப் 12, 2025 17:47

காகத்திற்கு சிறகும் நரிக்கு வாலும் காணாமல் போனது போல இவங்க கதை முடிந்தது ,ஆக வடையும் போச்சு


venugopal s
ஏப் 11, 2025 13:33

பாஜக கட்சியின் மாநில தலைவராக ஹெச் ராஜா தான் சரியான ஆள். தமிழகத்தில் ஐ சி யூ வில் உள்ள பாஜக கட்சியை முடித்து வைத்து விடுவார்!


Seekayyes
ஏப் 11, 2025 11:53

ஒருகால் அண்ணாமலையை நீக்கிவிட்டு, வேறு யாரை நியமித்தாலும், பஜக தமிழ்நாட்டில் அஸ்தமனம் ஆவது உறுதியே.


Sampath Kumar
ஏப் 11, 2025 11:32

கோவிந்த கோவிந்தாதான்


Anbuselvan
ஏப் 11, 2025 11:22

மாலை வரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் போல தெரிகிறது. மறுபடியும் மேலிடம் திரு அண்ணாமலை அவர்களை கட்சி தலைவராக நியமிக்க கூடும். ஆனால் தேர்தலை பொறுத்த வரை திரு நயினார் நாகேந்திரன் தலைமையில் அண்ணாமலை அவர்களை தவிர்த்து ஒரு குழுவை உருவாக்கி அதற்கு முழு அதிகாரத்தை கொடுக்க கூடும். திரு அண்ணாமலை அவர்களை கட்சி போட்டி இடும் இடங்களில் மட்டும் தீவிர பிரச்சாரம் செய்ய அறிவுறுத்த கூடும். வேண்டுமென்றால் பிரதம மந்திரி மற்றும் சில முக்கிய புள்ளிகள் கூட்டங்களில் பங்கேற்க அனுமதி தரக்கூடும். பார்ப்போம் இந்த யூகம் நிஜமாகிறதா என்று.


Thetamilan
ஏப் 11, 2025 10:06

இவர்கள் இருவர்தானா என்பதற்கு ஏன் அனைவரிடமும் விண்ணப்பம்? ஆதாரமில்லாமல் செய்யும் மாபெரும் குற்றம் பித்தலாட்டம் .


Savitha
ஏப் 11, 2025 12:11

உங்க திமுக வில் அந்த தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க கூட முடியாதே, அதை பற்றி கொஞ்சம் உங்க பொன்னான கருத்துக்களை பதிவு இடவும்


Indian
ஏப் 11, 2025 09:14

நயினார் தான்


பெரிய ராசு
ஏப் 11, 2025 12:54

யாரு அந்த நயினா , பேசுவாரா .. இல்லை டோரபுச்சியா ...எதுக்கும் தராதரம் வேணும்


N Sasikumar Yadhav
ஏப் 11, 2025 09:06

பாஜகவை 24 மணிநேரமும் நினைத்து கொண்டிருப்பவன் விஞ்ஞான ரீதியாக ஆட்டய போட முடியாத கோபாலபுர கொத்தடிமைகள் மட்டுமே


pmsamy
ஏப் 11, 2025 08:38

தமிழ்நாட்டில பாஜக என்றால் என்ன என்று தெரியாது இதுல தலைவர், நல்ல நகைச்சுவை


N Sasikumar Yadhav
ஏப் 11, 2025 09:03

பாஜக என்னவென்று தெரியாது ஆனால் தெரியாத பாஜகவை நினைத்துதான் தமிழக புள்ளிராஜா இன்டி கூட்டணியினருக்கு ...


nv
ஏப் 11, 2025 08:20

அண்ணாமலை இமயம் மற்றவர் வெறும் குன்று!! எங்கு போட்டி? BJP க்கு மூளை மழுங்கி விட்டது!!


பாமரன்
ஏப் 11, 2025 09:31

ஆமாமூங்க... ஆக்சுவலா அவர் இமயம் இல்லை அதைவிட ஒஸ்தியான ஆல்ப்ஸ்... இவர் ரோடு போட கொட்டியிருக்குற ஜல்லி... ஆக்சுவலா அவர் போட்டின்னா பெட்ரோல் பம்ப்பு.... ச்சே டொனால்ட் ட்ரம்ப் கூடத்தான் இருக்கோனும்....


பெரிய ராசு
ஏப் 11, 2025 12:56

பாமர நீ பேசலே உனக்குள் இருக்கும் ஓங்கோல் அடிவருடி ரத்தம் அப்படி ஹு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை