உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்ய தயாராகும் அண்ணாமலை

பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்ய தயாராகும் அண்ணாமலை

சென்னை : தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்த அவதுாறு வழக்கு தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலுவிடம், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், இரண்டு மணி நேரத்திற்கு மேல், குறுக்கு விசாரணை நடந்தது. தமிழக பா.ஜ., தலைவ ராக அண்ணாமலை இருந்தபோது, கடந்த, 2023, ஏப்.,14ல், 'டி.எம்.கே., பைல்ஸ்' என்ற பெயரில், பலரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். செய்தியாளர்களிடம் பேசுகையில்,''தி.மு.க., பொருளாளரும், எம்.பி.,யுமான டி.அர். பாலுவுக்கு, 21 நிறுவனங்கள் இருப்பதாகவும், அவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும்' கூறினார். இதையடுத்து, அண்ணாமலை மீது, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாலு அவதுாறு வழக்கு தொடர்ந்தார் . இந்த வழக்கு தொடர்பாக, சென்னை சைாதப்பேட்டை 17வது பெருநகர மாஜிஸ்திரேட் முன், நேற்று பாலு ஆஜரானார். அப்போது அண்ணாமலை தரப்பில், மூத்த வழக்கறிஞர் பால் கனகராஜ், பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்தார்.

இது குறித்து, பால் கனகராஜ் அளித்த பேட்டி:

தமிழக பா.ஜ., தலைவராக இருந்த அண்ணாமலை, சமூக வலைதளம் மற்றும் மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சக தரவுகளின் அடிப்படையில், 'டி.எம்.கே., பைல்ஸ்' என்ற பட்டியலை வெளியிட்டார். அவர், செய்தியாளர்கள் முன் வைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நேற்று காலை, 11:30ல் இருந்து, மதியம், 2:15 மணி வரை, பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. நேரமின்மை காரணமாக, குறுக்கு விசாரணை, அக்.,13க்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம், பாலுவிடம் நான் குறுக்கு விசாரணை செய்யலாமா என, அண்ணாமலை என்னிடம் கேட்டார். அதற்கு சட்டத்தில் இடம் உண்டு என, அவரிடம் தெரிவித்து உள்ளேன். அன்று அவரும் நீதிமன்றத்தில் ஆஜராவார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

venugopal s
செப் 23, 2025 18:56

அண்ணாமலை பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்து எப்படி குறுக்கு வழியில் சம்பாதிப்பது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார் போல் உள்ளதே!


நிக்கோல்தாம்சன்
செப் 24, 2025 06:45

அதுக்கு தான் விசாரணை செய்யவேண்டும்


Suresh Yesubalan
செப் 23, 2025 15:33

தன்னை புனிதர் என்று காட்டிக்கொள்ளும் இவர் ,இவர் பல ஆயிரம் கோடி சம்பாதித்துவிட்டார் என்ற செய்திகள் உலா வருகின்றன ,இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக ,அவர்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்து ,தன்னை புனிதன் என்று நிரூபிக்கலாமே .இவர் தன்னை புனிதர் என்று நிரூபிக்காதவரை இவரும் அழுக்குமுட்டை தான் . இங்குள்ள சட்டமும் ,மக்களும் ,பலசமயம் ,திருடனை பார்ப்பதில்லை . .யார் திருடன் என்றுதான் பார்க்கிறது .இந்த சட்டமும் ,மக்களும் ,இருக்கும்வரை இன்னும் பலநூறு அழுக்குமுட்டை அண்ணாமலை தோன்றுவார்கள் .இப்படி அநீதிக்கு துணைபோகும் நாம்தான் குற்றவாளிகள் .அவர்கள் அல்ல .


Naga Subramanian
செப் 23, 2025 16:07

எல்லா பதவியையும் பல காலம் ருசித்து கோட்டை போட்டுத் திருடிய அந்த ஆள் பத்தி பேசுன்னா, அத விட்டுட்டு, எந்த அமைச்சரவையிலும் மற்றும் பதவியிலும் இல்லாத, அண்ணாமலை பத்தி பேச கூச்சமாயில்லை. போயி கோர்ட்டுல கேசு போடுங்கய்யா. அங்க போயி பேசுங்க. தில்ல்லா, மலை நீதி மன்றத்துக்கு போவதை கண்டு ரத்த கண்ணீர் வருகிறதோ? அதுசரி, தங்கள் சமூகத்தால் வெற்றி பெற்று வந்த தீமுகா பற்றி நாடே அசிங்கமா பேசும்போது தாங்கள் வருத்தப் படுவது நன்கு தெரிகிறது. தினமும் 2 ஜெலுசில் மாத்திரை சாப்பிடவும் அன்பரே. வயிறு எரிச்சல் அடங்கும்.


K.SANTHANAM
செப் 23, 2025 14:57

தமிழகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.


Barakat Ali
செப் 23, 2025 14:48

குறுக்கு விசாரணை செய்யப்படுவது பிடிக்காது .......


Partha
செப் 23, 2025 14:45

பாலு ஹாஸ்பிடல் அட்மிட்டு ஆய்டுவாரு .. அப்படியே அந்த சேது சமுத்திரம் ப்ரொஜெக்ட்ல 5000 கோடி எங்க போச்சி னு கேளுங்க .. கடல் ல இருந்து மண்ணு அல்லி கடலேஏ கொட்டுனாங்க .. அதுக்கு 5000 கோடி யா செலவாச்சு


குடிகாரன்
செப் 23, 2025 14:25

பாலுவுக்கு........


Naga Subramanian
செப் 23, 2025 13:57

பாஜகவுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. அதுவும் அண்ணாமலை அவர்களே குறுக்கு விசாரணை நடத்த போவது அருமையிலும் அருமை.


SUBRAMANIAN P
செப் 23, 2025 13:56

வடிவேலு காமெடி மாதிரி ஆகப்போவுது


K.Rajasekaran
செப் 23, 2025 13:13

அண்ணாமலை அவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு, பாலு வின் முகத்திரையை கிழிப்பதற்கு, தேச துரோகிகள் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்


Kubendran N
செப் 23, 2025 12:36

மாட்டிக்கினாரு ஒருத்தரு அவரை காப்பாத்தணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை