உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க.,எம்.எல்.ஏ., அருளுக்கு அடுத்தடுத்து ஷாக்; சட்டசபையில் அன்புமணி வைத்த செக்!

பா.ம.க.,எம்.எல்.ஏ., அருளுக்கு அடுத்தடுத்து ஷாக்; சட்டசபையில் அன்புமணி வைத்த செக்!

சென்னை: பா.ம.க., கொறடா பதவியில் இருந்து எம்.எல்.ஏ., அருளை நீக்க வலியுறுத்தி அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்தனர். பா.ம.க.,வின் நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணிக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. இதனால், இருவரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை நீக்கியும், சேர்த்தும் வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6craiss6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், ராமதாஸின் தீவிர ஆதரவாளரான எம்.எல்.ஏ., அருளை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அன்புமணி உத்தரவிட்டார். ஆனால், அருளை நீக்க வேண்டுமானால் தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும், பா.ம.க., சட்டசபை கொறடாவாக அருளே தொடர்வார் என்று ராமதாஸ் கூறியிருந்தார். இந்த நிலையில், பா.ம.க., கொறடா பதவியில் இருந்து எம்.எல்.ஏ., அருளை நீக்க வலியுறுத்தி அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை செயலரிடம் மனு கொடுத்தனர். கட்சியின் தலைவர் அன்புமணி அளித்த பரிந்துரைக் கடிதத்தை, பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேஷ்வரன், சதாசிவம், சிவக்குமார் ஆகியோர் சட்டப்பேரவை செயலரிடம் வழங்கினர்.இதற்கு போட்டியாக, பா.ம.க.,வின் கொறடாவாக தானே தொடர்வேன் என்று ராமதாஸின் ஒப்புதல் கடிதத்தோடு, சபாநாயகரை எம்.எல்.ஏ., அருளும் சந்திக்கிறார். இந்த நிலையில், பா.ம.க.,வின் புதிய கொறடாவாக மயிலம் சிவக்குமாரை நியமிக்கக் கோரி, அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mahendran Puru
ஜூலை 04, 2025 18:58

எல்லாம் இந்த பாஜக செய்யும் வேலை. ஒவ்வொரு கட்சியையும் புகுந்து உடைத்தால் தாம் வளரலாம் என்று இதை ஒரு திட்டமாக செயல் படுத்துகிறார்கள். காலம் போன காலத்தில் ராமதாசர் பேசாமல் முடங்கினால் கட்சி தப்பிக்கும், இல்லாவிட்டால் அம்பேல் தான்.


nagendhiran
ஜூலை 04, 2025 20:05

சரி தேமுதிக, மதிமுக, மநீம இந்த கட்சிகளை உடைத்தது"யாரு?


rama adhavan
ஜூலை 04, 2025 20:32

நல்ல கற்பனை. அப்போ காங்கிரஸ், திமுக வை.,கூட உடைக்கலாமே? அப்படியா சொல்ல வருகிறீர்கள்?


krishnan
ஜூலை 04, 2025 17:59

அன்புமணி எதிர் காலம் .. ராமதாஸ் கடந்த காலம் . மரியாதையாக , கொரவமாக நடத்தப்பட வேண்டும் . அன்புமணி தான் நிகழ் காலம் . இளைஞர் ..


Santhosh Santhosh
ஜூலை 04, 2025 16:53

அன்புமணி செய்வது மிகப்பெரிய தவறு. ஐயாவிற்கு பேச்சை கேட்டு நடக்கவில்லை என்றால் அன்புமணி அரசியல் அழிவை தடுக்க முடியாது.


Santhosh Santhosh
ஜூலை 04, 2025 16:51

அன்புமணி செய்வது மிகக் கீழ்த்தரமான செயல். அன்புமணியின் அரசியல் வாழ்வு கூடியவிரைவில் முடிந்துவிடும். அப்பா பேச்சுக்கிட்டு நடக்க வில்லை என்றால் அன்புமணி அரசியல் அழிவு யாராலும் தவிர்க்க முடியாது.


M Ramachandran
ஜூலை 04, 2025 14:39

அப்பன் மகன் சண்டை டிராமா வெட்டு குத்து இல்லாமால் முடிவுக்கு வராது போல தெரியுது.


Anbuselvan
ஜூலை 04, 2025 14:09

சபாஷ். சரியான போட்டி. ஆனால் இளையவர் வென்று விடுவார்.


M Ramachandran
ஜூலை 04, 2025 13:44

இது நல்ல தருணம் வேறு கட்சிக்கு தாவி விடுவது. அப்பனும் மவனும் டிராமா ஆடுவது எது வரைய்ய என்பது தெரிந்து விடுவது.


SIVAKUMAR
ஜூலை 04, 2025 12:35

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தான்


SANKAR
ஜூலை 04, 2025 13:43

and that is bjp.bjp wants Anbumani faction to join them as Ramadoss is refusing


முக்கிய வீடியோ