உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் கட்டுமான நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு

சென்னையில் கட்டுமான நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு

சென்னை: சென்னையில் லஞ்சம் கொடுத்த புகாரில் சிக்கிய 3 கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் அதிகாரிகளுக்கு கட்டுமான நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி, லேண்ட்மார்க் ஹவுஸிங் புராஜெக்ட்ஸ், சென்னை பிரைவேட் லிமிடெட், கேஎல்பி புராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய 3 கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் இன்று(பிப்.,01) லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் சிக்கலாம் எனக் கூறப்படுகிறது. விசாரணை முடிவில், 3 கட்டுமான நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து தெரியவரும். 3 கட்டுமான நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
பிப் 02, 2024 00:35

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும்வரையில், லஞ்சத்தை ஒழிக்க முடியாது அப்பா... நீ சும்மா போப்பா...


Raghavan
பிப் 01, 2024 17:00

எங்கே வருமான வரித்து துறை வந்து சோதனை செய்துவிடபோகிறார்கள் என்பதர்க்முன்பே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முந்திக்கொண்டு சோதனை செய்து இருக்கலாம்.


Barakat Ali
பிப் 01, 2024 14:32

தொட்டுப்பார் ....


GMM
பிப் 01, 2024 14:29

தனியார் கட்டுமான நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம், அன்பளிப்பு கொடுத்தாலும், நேரடியாக லஞ்ச ஒழிப்பு பிரிவு தனியார் நிறுவனங்களை எதன் அடிப்படையிலும் சோதனை செய்ய அதிகாரம் இல்லை? தன் எல்லைக்குள் இருக்கும் தனக்கு கீழ் உள்ள நிரந்தர மாநில அரசு பணியாளர்கள் (நீதிமன்றம் நீங்கலாக) மீது மட்டும் தான் நடவடிக்கை எடுக்க முடியும். ( ED திவாரி லஞ்ச புகாரில், அரசு டாக்டர் மீது மட்டும் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.) பெறப்பட்ட புகாரை தலைமை செயலாளர் வழியே சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். புகார் லஞ்ச ஒழிப்பு பிரிவின் மீது இருந்தால், அதன் அடிப்படையில் தங்கள் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ராமகிருஷ்ணன்
பிப் 01, 2024 11:54

நடப்பது விடியாத விடியலின் அரசு. லஞ்சம் வாங்காம ஒரு வேலை நடந்தால் தான் அவர்களுக்கு பாராட்டு பத்திரம் தரனும். அந்த லஞ்சம் கடைசில எங்கே போவுது என்று கண்டுபிடிக்க முடியுமா.


seshadri
பிப் 01, 2024 11:31

லஞ்சம் வாங்காமல் ஒரு அனுமதியும் கிடைக்காது என்பது எல்லோரும் அறிந்த ரகசியம். இதெல்லாம் சும்மா காமெடி பண்ணுகிறார்கள்.


duruvasar
பிப் 01, 2024 11:05

பழிவாங்கும் நடவடிக்கையா? தேர்தல் சமயத்தில் நடத்துவதில் மர்மம் என்ன? முதல்வர் வெளிநாடு போன வாய்பை பயன்படுத்துகிறார்களா ?


ஆரூர் ரங்
பிப் 01, 2024 12:25

லாண்ட் மார்க் நிறுவனத்துக்கும் முதல்வருக்கும் தொடர்பு ....உள்ளது என்கிறீர்களா???? இல்லையென்கிறீர்களா?


Davamani Arumuga Gounder
பிப் 01, 2024 12:48

லஞ்ச ஒழிப்புத்துறை என்பது .. தமிழ்நாடு போலீஸ் - அங்கித் திவாரியை அரெஸ்ட் செய்த துறை .. என்பது கூடத்தெரியாத ஒரு துர்வாசர்?


மேலும் செய்திகள்