உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிபதி சுவாமிநாதனை மிரட்டும் தேச விரோத சக்திகள்; நடிகை கஸ்தூரி ஆவேசம்

நீதிபதி சுவாமிநாதனை மிரட்டும் தேச விரோத சக்திகள்; நடிகை கஸ்தூரி ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி சுவாமிநாதனை, தேச விரோத சக்திகள் சோஷியல் மீடியா மூலம் மிரட்டுவதாகவும், பொதுவெளியில் அவதூறு பரப்புவதாகவும், நடிகையும், பாஜ நிர்வாகியுமான கஸ்தூரி குற்றம் சாட்டி உள்ளார்.இது தொடர்பாக, திருப்பத்தூரில் நிருபர்களிடம் கஸ்தூரி கூறியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அங்குள்ள ஹிந்து, முஸ்லிம் மக்கள் இத்தனை ஆண்டு காலமாக கண்டு கொள்ளாத நிலையில் அரசியலுக்காக திமுக அரசு சர்ச்சையை எண்ணெய் ஊற்றி வளர்த்திருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e5205cv3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பையும் திமுக அரசு செய்துவிட்டு, தொடர்ச்சியாக மூன்று முறை நீதிமன்ற தீர்ப்பை மீறிய தமிழக ஹிந்து விரோத திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.நேற்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்னும் தெளிவான ஒரு தீர்ப்பினை கொடுத்து இருக்கிறார். வழங்கிய தீர்ப்பின் விவகாரம் முதல் முறை அல்ல பலமுறை இது போன்று நடந்துள்ளது. தமிழக அரசு ஹிந்து பண்டிகைகள் மற்றும் ஹிந்து கோவில்களுக்கு ஏதோ ஒரு வகையில் செயல்பாடுகளை எடுக்காமல் எதிர்வினை ஆற்றுகிறது.

தனிப்பட்ட முறையில்...!

தீர்ப்பை கொடுக்கும் நீதிபதியை, என்ன விதமாக எல்லாம் நீங்கள் அவதூறு பேசுகிறீர்கள்? நீதிபதி ஜி.ஆர். சாமிநாதனை, இந்த அரசு தனிப்பட்ட முறையில் தாக்குகிறது. ஒரு நீதிபதியை திமுக அரசு மற்றும் அதன் கூட்டணி அரசுகள் தொடர்ந்து அவர் மீது அவதூறு பரப்பி வருவதன் மர்மம் என்ன?

இசட் பாதுகாப்பு

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக மதுரையில் தேச விரதோ சக்திகள் சோசியல் மீடியா மூலம் மிரட்டல் விடுக்கும் வகையில் அவரை பொதுவெளியில் அவதூறு பரப்பி வருவதால் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மத்திய அரசு இசட் பாதுகாப்பு உடனடியாக வழங்க வேண்டும்.தமிழக மக்களின் மன ஓட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அறிந்திருந்தாலும் மீசையில் மண் ஓட்டாதது போல் தான் அவர் தற்போது பேசி வருகிறார். தமிழக மக்கள் மட்டுமல்லாமல் திமுக ஓட்டு வங்கியே அவருக்கு எதிராக திமுக அரசின் மீது மனம் நொந்து அதிருப்தியில் உள்ளனர். வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக அரசு எதிர்க்கட்சி ஆக வேண்டுமானாலும் பதவி ஏற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Gopalakrishnan K V
டிச 11, 2025 12:27

அப்பழுக்கற்ற நீதி அரசர். இவரை போன்ற ஒருவர் நீதிபதியாக இருப்பது நீதிமன்றத்திற்கும், நாட்டிற்கும் பெருமை.


பேசும் தமிழன்
டிச 10, 2025 21:32

எங்களுக்கு எதிராக யார் தீர்ப்பு சொன்னாலும் அவர்களை அப்படி தான் மிரட்டுவோம்.... இப்படிக்கு திருட்டு மாடல் ஆட்கள்.


முருகன்
டிச 10, 2025 21:11

கஸ்தூரி எவ்வளவு பெரிய மக்கள் தலைவர் ஏதாவது ஒரு மக்கள் பிரச்சினைகள் இவருக்கு தெரியுமா சர்ச்சை பேச்சை தவிர


vivek
டிச 10, 2025 21:24

உன் சமச்சீர் அறிவுக்கு ஏற்ற கேள்வி கேளு


theruvasagan
டிச 11, 2025 10:09

நாட்டின் குடியரசு தினம் சுதந்திர தினம் எவை என்று கூட தெரியாதவர்கள் எல்லாம் மக்கள் தலைவராகவும் அரசை நடத்துபவர்களாகவும் இருக்கிறார்களே. அதைவிடவா கஸதூரி மோசம்.


அன்பு
டிச 11, 2025 16:06

முருகனுக்கு தெரிந்த பிரச்சினைகள். 200 ரூபாய், குவாட்டர், பிரியாணி.


Barakat Ali
டிச 10, 2025 20:55

திமுக இன்றல்ல நேற்றல்ல .... துவக்கப்பட்டதில் இருந்தே தேச விரோத கட்சிதான் ..... இஸ்லாமிய வாக்குவங்கியைத் தக்கவைப்பதாக நினைத்து ஹிந்துக்களை அவமதித்துள்ளது திமுக ....


Ramesh Sargam
டிச 10, 2025 20:50

நேர்மையாக தன்னுடைய பணியை செய்துகொண்டிருக்கும் நீதிபதி ஸ்வாமிநாதன் அவர்களுக்கு அதிக பாதுகாப்பு மத்திய அரசு கொடுக்கவேண்டும். பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி இண்டி கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் புகார் கொடுத்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த 8 ஆண்டுகளில் 73 ஆயிரத்து 505 பிரதான வழக்குகளுக்கு தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைகள்தான் திமுகவினருக்கு பெரும் சோதனை, வேதனை. இவரோ கடந்த 8 ஆண்டுகளில் 73 ஆயிரத்து 505 பிரதான வழக்குகளுக்கு தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார். இவரை போற்றுவதைவிட்டு, இவர் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று திமுகவினர் போராட்டம் செய்வது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. உச்சநீதிமன்றம் தமிழக அரசை கடுமையாக கண்டித்து, நீதிபதி ஸ்வாமிநாதன் தீர்ப்பை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒரு தீர்ப்பு வழங்கவேண்டும். திமுகவினருக்கு சரியான பாடம் உச்சநீதிமன்றம் கற்பிக்கவேண்டும்.


Skywalker
டிச 10, 2025 20:28

It's basic ethos of a civilized society to respect each and every others even if they are enemies or opponents, unfortunately some fools doesn't have that necessary quality


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை