உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அன்வர் ராஜா ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கம்

 அன்வர் ராஜா ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கம்

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி அ.தி.மு.க., செயலர் சீமான் மரைக்காயர், மீனவர் பிரிவு மாவட்ட இணைச் செயலர்கள் சீனி காதர் மொய்தீன், எம்.ஏ.பக்கர், மண்டபம் பேரூராட்சி ஐ.டி., பிரிவு இணைச் செயலர் ஹமீது அப்துல் ரகுமான் மரைக் காயர் ஆகியோர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, கடந்த ஜூலையில் தி.மு.க.,வில் இணைந்தார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகளை, பழனிசாமி தற்போது நீக்கியுள்ளார். இதையடுத்து, 'நீக்கப்பட்ட அனைவரும் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைவோம்' என கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி