மேலும் செய்திகள்
பிரதமரை விமர்சித்து போஸ்டர்: நடவடிக்கை எடுக்காத போலீஸ்
18 minutes ago
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி
42 minutes ago
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில், தீர்ப்புக்கு எதிராக, இரண்டாது குற்றவாளி திருநாவுக்கரசு மட்டும், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். கோவை பொள்ளாச்சியில், கடந்த 2019 ல், பெண்கள் மற்றும் மாணவிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு, கடந்த மே, 13 ல் தீர்ப்பளிக்கப்பட்டது. கு ற்றவாளிகள் சபரிராஜனுக்கு நான்கு ஆயுள், திருநாவுக்கரசுக்கு ஐந்து ஆயுள், சதீஷிற்கு மூன்று ஆயுள், வசந்தகுமாருக்கு இரண்டு ஆயுள், மணிவண்ணனுக்கு ஐந்து ஆயுள், பாபுவிற்கு ஆயுள்சிறை, ெஹரன் பாலுக்கு மூன்று ஆயுள் சிறை, அருளானந்தம், அருண்குமாருக்கு ஆயுள்சிறை விதிக்கப்பட்டது. ஒன்பது குற்றவாளிகளும் சாகும் வரை தண் டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. தண்டனை பெற்ற குற்றவாளிகள், 60 நாட்களுக்குள், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், தீர்ப்பு அளிக்கப்பட்டு, 7 மாதங்களுக்கு மேலாகியும் மேல்முறையீடு செய்யாமல் இருந்தனர். இதற்கிடையில் இரண்டாவது குற்றவாளி திருநாவுக்கரசு, சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்புக்கு எதிராக கடந்த 4ம் தேதி மேல்முறையீடு செய்தார். அத்துடன், காலதாமதமாக மேல்முறையீடு செ ய்ததற்கு மன்னிப்பு மனுவும் தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. மேல்முறையீட்டு வழக்கில், சி.பி.ஐ., தரப்பில் வக்கீல் சீனிவா சன் ஆஜராகிறார். கோவை மகளிர் கோர்ட்டில் ஆஜராகி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த சி. பி.ஐ., வக்கீல் சுரேந்தர மோகனும், மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராக கூடுதலாக நியமிக்கப் பட்டுள்ளார்.
18 minutes ago
42 minutes ago