உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்ஒதுக்கீடுக்கு எதிராக பேரணி ஐகோர்ட்டில் முறையீடு

உள்ஒதுக்கீடுக்கு எதிராக பேரணி ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் நேற்று, கிருஷ்ணசாமி ஆஜரானார்.அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்த முடிவு செய்திருந்ததாகவும், மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததாகவும் கூறிய அவர், அனுமதி அளிக்குமாறு முறையிட்டார்.இதையடுத்து, இந்தப் பிரச்னை குறித்து வழக்கு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும், வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை எனவும், முதல் பெஞ்ச் தெரிவித்தது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் குவாரி டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தன. முன்னாள் எம்.பி., செல்லக்குமார் ஆஜராகி அவகாசம் கோரினார்.விசாரணையை, நவ., 15க்கு தள்ளி வைத்த முதல் பெஞ்ச், அன்று வாதங்களை துவங்கவில்லை என்றால், வழக்கை தள்ளுபடி செய்வதோடு, டெண்டருக்கு விதித்திருந்த தடையை நீக்குவதாகவும் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி