உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபாநாயகரிடம் முறையீடு

சபாநாயகரிடம் முறையீடு

பா.ம.க., தலைவர் அன்புமணி சார்பில், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு, சபாநாயகர் அப்பாவுவை நேற்று சந்தித்தார். அப்போது, 'சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், பா.ம.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, அவரை பா.ம.க., - எம்.எல்.ஏ., என்று குறிப்பிடக்கூடாது. பா.ம.க.,வின் ஐந்து எம்.எல்.ஏ.,க்களில் மூன்று பேர் இணைந்து, கட்சியின் சட்டசபை குழு தலைவராக வெங்கடேஸ்வரனை அறிவிக்க வேண்டும் என, கடிதம் கொடுத்துள்ளோம். அதை உடனே செயல்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தினார். இதுபற்றி, பாலுவிடம் கேட்ட போது, ''சபாநாயகரிடம், 30 நிமிடங்கள் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறினோம். சட்டசபை முன்னவர் துரைமுருகனிடம் ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறினார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை