உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கான, 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், தமிழக அரசு பணியில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கு, 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வழங்கப்படுகிறது. அரசு அங்கீகரித்த விளையாட்டு போட்டியில், சீனியர் பிரிவில் சாதனை படைத்தவர்கள் பயன் பெறலாம். இதற்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், www.sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில், இன்று முதல் விண்ணப்பிக்கலாம். செப்.,24 விண்ணப்பிக்க கடைசி நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை