மேலும் செய்திகள்
யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்
4 hour(s) ago | 19
கோழி இறகு... விரிகிறது வணிகச்சிறகு!
5 hour(s) ago | 2
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; சென்னையில் 2வது நாளாக நீடிப்பு
7 hour(s) ago | 6
சென்னை : டி.என்.பி.எஸ்.சி.,க்கு 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து உள்ளார்.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் தேர்வு செய்யப்பட்டு, கவர்னர் ஒப்புதலுடன் நியமிக்கப்படுகின்றனர். இதில், ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களுடன் செயல்பட வேண்டிய டி.என்.பி.எஸ்.சி., தற்போது தலைவர் இன்றி, வெறும் 4 உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. தற்போது உறுப்பினர் முனியநாதன், தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.இந்நிலையில், மேலும் 5 பேரை டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.இதன்படி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவனருள்ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி சரவணகுமார்உஷா குமார்டாக்டர் தவமணி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள், 62 வயது அல்லது 6 ஆண்டுகள் வரை பதவியில் இருப்பார்கள்.
4 hour(s) ago | 19
5 hour(s) ago | 2
7 hour(s) ago | 6