உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலாயா பல்கலையில் செஞ்சி பேராசிரியர் நியமனம்

மலாயா பல்கலையில் செஞ்சி பேராசிரியர் நியமனம்

செஞ்சி: மலேசிய நாட்டில் கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள திருவள்ளுவர் இந்திய ஆய்வுகள் இருக்கையில் தொடக்க இருக்கை பேராசிரியராக செஞ்சி அடுத்த நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த பேராசிரியர் செல்லப்பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இது குறித்து மலேசியாவிற்கான இந்திய உயர் ஆணையகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கடந்த 2024 ம் ஆண்டு மலேசிய பிரதமர் அன்வர்பின் இப்ராஹீம் இந்தியா வருகை தந்த போது, இந்திய பிரதமர் மோடி மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இந்தியா ஆய்வுகள் இருக்கை தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் மலாயா பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டுள்ள திருவள்ளுவர் இந்திய ஆய்வுகள் இருக்கை துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இருக்கையின் முதல் பேராசிரியராக 30 ஆண்டு காலம் மானுடவியல் பேராசிரியராக பணிபுரிந்து, சிறந்த ஆய்வாளராகவும், கல்வியாளராகவும் இருந்து வரும் பேராசிரியர் செல்லபெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை