உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினசரி சம்பளத்தில் பேராசிரியர் நியமனம்

தினசரி சம்பளத்தில் பேராசிரியர் நியமனம்

சென்னை:அனைத்து கல்லுாரிகளின் முதல்வருக்கு, அண்ணா பல்கலை பதிவாளர் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:சிண்டிகேட் குழு முடிவு, நிதிக்குழு தீர்மானம் அடிபடையில், தற்காலிக பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை, தினசரி சம்பளம் அல்லது ஒருங்கிணைந்த ஊதியத்தில் பணியமர்த்தலாம். ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், மனிதவள நிறுவனத்தின், 'அவுட்சோர்சிங்' வாயிலாக நியமனம் செய்யப்பட வேண்டும்.தற்போது, உபரியாக உள்ள தற்காலிக பணியாளர்கள் குறித்த விபரங்களை, பல்கலை நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். பிற துறைகளில் தேவை உள்ள இடங்களில், அவர்களை நியமனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !