உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தற்காலிக பஸ் ஊழியர்கள் நியமனம்: பண்டிகை கால பயணம் ரிஸ்க் தான்

தற்காலிக பஸ் ஊழியர்கள் நியமனம்: பண்டிகை கால பயணம் ரிஸ்க் தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், அரசு போக்குவரத்து கழகங்களில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கும் பணி துவங்கி உள்ளது.தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், மெக்கானிக்கல் பிரிவு என, 1.21 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நிரந்தர காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பிரிவில், 30 சதவீதம் வரை பற்றாக்குறை உள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளதால், வழக்கத்தை விட கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். எனவே, தற்காலிகமாக பணியாளர்களை நியமிக்க, அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: பயணியருக்கு பாதிப்பின்றி பஸ்கள் இயக்க, நிர்வாகம் போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்து, பயணியருக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்களை இயக்க உள்ளோம். ஒவ்வொரு போக்குவரத்து கழகத்திலும், தலா 1,600க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்ய உள்ளோம். நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்யும் போது, தற்காலிக பணியாளர்கள் படிப்படியாக நீக்கப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தற்காலிக பணியாளர் நியமனம் என்பது நிரந்தர தீர்வு அல்ல. அனைத்து நாட்களிலும் பணி கிடைக்காது என்பதால், தற்காலிக பணிக்கு வருவதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும், சென்னை போன்ற மாநகரங்களில் பஸ்களை ஓட்ட முடியாமல், அவர்கள் திணறுகின்றனர். தற்காலிக பணியாளர்கள் வாயிலாக அரசு பஸ்களை இயக்கினால் பயணியர் பத்திரமாக ஊர் போய் சேருவது சிரமம்தான்.எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வாக, நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Lion Drsekar
அக் 08, 2024 09:38

இன்றைக்கு எல்லா நிலைகளிலும் பணிபுரிபவர்கள் தற்காலிக அணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்று செல்வாக்குள்ளவர்கள் மீண்டும் பென்சன் பெற்றுக்கொண்டு அதே பணியில் இருக்கிறார்கள், அவர்கள் நேரடியாக நிரந்தரம் செய்யமுடியாது , தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் , ரிஸ்க் ஒரு ரஸ்க். சோதனைச்சாலைகளில் எலிகள், பறவைகள் மிருகங்களை பரிசோதிப்பதுபோல் இன்று ,,,, வந்தே மாதரம்


rama adhavan
அக் 08, 2024 07:09

எதுக்கு சிரமம். தனியார் வசம் மொத்தமாக ஒப்படைக்கவும். ஆம்னி பஸ்களை ஒழிக்கவும். கட்டணத்தை மட்டும் அரசு நிர்ணயம் செய்யவும். கட்டண கொள்ளையை தவிர்க்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கட்டும். இதனால் இலவச சவாரியும் ஒழியும்.


அப்பாவி
அக் 08, 2024 07:02

இப்பவே ஊருக்கு போங்க. இல்லே தீவாளிக்கு அடுத்த நாள் போங்க. எல்லோரும் ஒரே நாளில் போய் எடுக்காதீங்க.


சாண்டில்யன்
அக் 08, 2024 06:31

தனியார் ஆம்னி பேருந்துகளில் எல்லாமே மத்திய / மாநில அரசு ஊழியர்கள்தான். இப்போ மத்திய அரசாங்கமே தனியார் மயம்தான் என்பது வேறு விஷயம் நம்ம்பி பயணம் செய்யலாம் அதேபோல நம்ம அரசு போக்கு வரத்து ஓட்டுக்களால் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் அப்பாடா "அனைத்தும்" என்கிற செம்மொழி சொல்லை போட்டாச்சு ஸீரோ விபத்து பேருந்துகள் என்று கின்னஸ் ரெகார்ட் வாங்கியிருக்கே.


Kasimani Baskaran
அக் 08, 2024 05:40

பாத்து செய்டா கோவாலு. சிக்காம செய்யனோம். 35000 பேர் வேற.


புதிய வீடியோ