உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டப்படிப்புடன் தொழிற்பயிற்சி மக்கள் கருத்து கேட்கிறது யு.ஜி.சி.,

பட்டப்படிப்புடன் தொழிற்பயிற்சி மக்கள் கருத்து கேட்கிறது யு.ஜி.சி.,

சென்னை: 'பட்டப்படிப்புடன் தொழிற்பயிற்சி அளித்து, கல்லுாரி மாணவர்களை திறமை உள்ளவர்களாக்குவது தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்' என, யு.ஜி.சி., அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, அதன் செயலர் மணீஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கை:

பட்டப்படிப்பு பாடத்திட்டத்துடன், தொழிற் கல்வியை இணைக்கும் திட்டம் உள்ளது. இதனால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், நிறுவனங்களுக்கும் திறமையான பணியாளர்கள் கிடைப்பர். இதற்காக, மூன்றாண்டு பட்டப்படிப்பில், முதல் மூன்று செமஸ்டர்களிலும், நான்காண்டு பட்டப்படிப்பில், 2, 3, 4 செமஸ்டர்களிலும், தொழில் நிறுவனங்களில் தொழிற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பயிற்சியின் போது உதவித் தொகை வழங்க வேண்டும். இதை செயல்படுத்த, மத்திய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுடன், கல்லுாரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும். அதற்கான தகுதிகள், பல்கலை மானியக்குழு இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, கல்வியாளர்கள், தொழில் முனைவோர், மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர், தங்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை, நவம்பர், 16ம் தேதிக்குள், யு.ஜி.சி.,யின், https://www.ugc.gov.in/Notices பக்கத்தில் தெரிவிக்கலாம். இது குறித்த முழு விபரங்கள், AEDP என்ற குறிப்பில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை