உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாகன தணிக்கையின் போது டிஜிட்டல் ஆவணங்கள் போதுமா?

வாகன தணிக்கையின் போது டிஜிட்டல் ஆவணங்கள் போதுமா?

கோவை : வாகன தணிக்கையின் போது நகல் ஆவணங்களை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வாகன ஓட்டிகள் போலீசாரின் வாகன தணிக்கையின் போது, அசல் அல்லது நகல் ஆவணங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. டிஜிட்டல் முறையிலான ஆவணங்களை காண்பித்தால் போதும் என அறிவிக்கப்பட்டது.அதன்பின்னர், பெரும்பாலான வாகன ஓட்டிகள் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டனர். 'டிஜிலாக்கர்', 'எம் பரிவாகன்' செயலிகளில், தங்கள் வாகனங்களின் விவரங்களை பதிவேற்றினால், அதில் வாகனத்தின் ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் டிஜிட்டலாக வந்து விடுகிறது. இதை போலீசாரின் வாகன சோதனையின் போது காண்பிக்கலாம்.மழைக்காலங்களில் நகல் மழையில் நனைந்து விடுவது, சேதமாவது உள்ளிட்டவைகளில் இருந்து வாகன ஓட்டிகள் தப்பினர். ஒரு சிலர் இன்சூரன்ஸ் காலம் முடிந்த பின்பும், புதுப்பிக்காமல், நகலை 'ஸ்கேன்' அதில் எடிட் செய்து மாற்றி, போலி நகலை தயார் செய்து போலீசாரை ஏமாற்றி வந்தனர். டிஜிட்டல் முறையில் உள்ள ஆவணங்களில் மாற்றம் செய்ய முடியாது.ஆனால், ஒரு சில போலீசார், அசல் அல்லது நகல் ஆவணங்களை காண்பிக்குமாறு கட்டாயப்படுத்துவதால், வாகன ஓட்டிகள் மற்றும் போலீசார் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'செயலிகளில் காண்பிக்கும் டிஜிட்டல் ஆவணங்களே போதுமானதுதான். எல்லோரிடமும் போலீசார் அசல் ஆவணங்களை கேட்பதில்லை. இரவு நேரங்களில், சந்தேகப்படும்படியாக வரும் வாகன ஓட்டிகளிடம் மட்டுமே, அசல் ஆவணங்கள் கேட்கப்படுகின்றன.பல்வேறு குற்றச்சம்பவங்கள், திருட்டு வாகனங்களை பயன்படுத்தியே நடக்கின்றன. இதனால், சந்தேகப்படும் நபர்களிடம் மட்டுமே அசல் ஆவணம் கேட்கப்படுகிறது. 'வாகன தணிக்கையின் போது வாகன ஓட்டிகளிடம், அசல் அல்லது நகல் ஆவணங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Srinivasan Seenu
ஜூன் 02, 2025 20:51

அதிகாரிகளின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது


Srinivasan Seenu
ஜூன் 02, 2025 20:49

அதிகாரிகளின் சரியான முடிவு வரவேற்கத்தக்கது


Sankar G
ஜூன் 02, 2025 12:23

எடுக்க மாட்டார்கள்


visu
ஜூன் 01, 2025 16:11

இவ்வளவு நீளமா பேசினாலும் கடைசியில் ஏதாவது தெளிவு வந்ததா டிஜிட்டல் ஆவணம் ஏற்றுக்கொள்ள மறுத்தால் நடவடிக்கை எடுக்க படுமா


GUNA SEKARAN
ஜூன் 01, 2025 15:20

டாஸ்மாக்கில் இருந்து கிளம்பும் போது டாஸ்மாக்கில் சரக்கு வாங்கியதற்கு, திராவிட மாடல் போலீஸ் சான்று கேட்காமல் விடுவதே ஆச்சரியம்தான். சரக்கு வாங்காமல் சென்றால் வழக்கு போட்டாலும் போடுவார்கள்.


Suresh Sivakumar
ஜூன் 01, 2025 14:43

That depends on the collection target


Ramesh Sargam
ஜூன் 01, 2025 13:17

அப்படி நகல் ஆவணங்களை கேட்டு வாகன ஓட்டிகளை துன்புறுத்தும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். எடுப்பீர்களா? எடுப்பார்களா?


Sankar G
ஜூன் 02, 2025 12:22

எடுக்க மாட்டார்கள்


Apposthalan samlin
ஜூன் 01, 2025 10:08

நான் போகும் போது license வீட்டில் இருந்தது நான் போட்டோ எடுத்து வைத்து இருந்தேன் காண்பித்தேன் வண்டி நம்பர் ஸ்கேன் பண்ணி பெயர் சொன்ன உடனே விட்டு விட்டார்கள் .


Ravi Shankar
ஜூன் 01, 2025 09:50

எட்டாவது உலக அதிசியம் என்னவென்றால்... டாஸ்மாக் கடை முன்னே 100 பைக் இருந்தாலும் செக் பண்ணாத காவல்துறை, 1கிம் தள்ளி, போற பைக் எல்லாத்தையும் ஊது ..ஊதுன்னு ... சொல்றது தான். காற்றில் பறக்கும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ...


Padmasridharan
ஜூன் 01, 2025 08:25

சந்தேகப்படும் நபர்களை எப்படி கண்டுபிடிப்பாங்க. .ஹெல்மெட்குள்ள தலையை விட்டா.. பாக்கறவங்களை எல்லாம் சந்தேகப்பட்டு, வெச்சிருக்கிற வண்டியைப் பாத்து பணம் எவ்வளவு தேறும்னுதானே. எல்லார்க்கும் பணம் வாங்கி லைசென்ஸ் கொடுத்து வண்டிய ஓட்டும் போதும் பணம் வாங்கி விபத்து நடக்க விட்டு அதிலயும் பணம் வாங்கி.. அந்த பணத்துல குடும்ப வம்சத்துக்கு கர்மா பலனை வாங்கி.. இவங்க அட்டூழியம் தங்களை சாமியோவ்..


முக்கிய வீடியோ