உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் ஸ்டேசன்கள் செயல்படுகின்றனவா: அண்ணாமலை கேள்வி

போலீஸ் ஸ்டேசன்கள் செயல்படுகின்றனவா: அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' போலீஸ் ஸ்டேசன்கள் செயல்படுகின்றனவா அல்லது தி.மு.க.,வினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.சேலத்தை சேர்ந்த ஜான் என்ற ரவுடி, கொலை வழக்கில் ஜாமினில் வந்துள்ளார். இவர், ஈரோடு மாவட்டம் பவானி அருகே மனைவியுடன் சென்ற போது, காரில் துரத்திய 5 பேர் கொண்ட கும்பல் விபத்தை ஏற்படுத்தி வெட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u1wkgh6o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இன்று( மார்ச் 19), ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. சட்டத்திற்கோ, போலீசாருக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. போலீஸ் ஸ்டேசன்கள் செயல்படுகின்றனவா அல்லது தி.மு.க.,வினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க முதல்வருக்கு அசிங்கமாக இல்லையா. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
மார் 20, 2025 08:48

எதிர்கட்சி போராட்டம் நடத்த விடாமல் தடுப்பதில்... காவல்துறை மிகவும் துரிதமாக செயல்பட்டு வருகிறது.. ஆனால் குற்றம் நடப்பதை தடுப்பதில் கோட்டை விட்டு விடுகிறார்கள்.


Padmasridharan
மார் 20, 2025 04:14

ஒழுங்கு, பணத்த எப்படியெல்லாம் மக்களை அதிகார பிச்சையெடுத்து வாங்கலாம்னு சட்டத்தை அவங்க கையில எடுத்துக்கிட்டு போலி" சார்ஸ்களாக சுற்றி வருகின்றனர். காவல் நிலையங்களும் அதற்காகவே திறந்து கிடக்கின்றது. கூட வேலை பார்க்கும் பெண் காவலர்களுக்கு முதலில் பாதுகாப்பு கொடுக்க சொல்லுங்கள். இரவு ரோந்துக்கும் வரச்சொல்லுங்கள். பின்பு பெண்கள் அதிகாரம் பற்றி பேசலாம் அப்பாக்கள். காவல் துறையே பாலியல் தொல்லைகள் தருகின்றன


Kasimani Baskaran
மார் 20, 2025 03:52

பல போலீஸ் ஸ்டேஷன்கள் தீமக்காவின் கிளை நிறுவனம் போல செயல்படுகின்றன..


மதிவதனன்
மார் 20, 2025 01:14

மீரட் : லண்டனில் இருந்து திடீரென திரும்பி வந்த கப்பல் அதிகாரியான தன் கணவரை, கள்ளக் காதலனுடன் சேர்ந்து, 15 துண்டுகளாக வெட்டிக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். இங்கு போலீஸ் ஸ்டேஷன் இல்லையா


கலைஞர்
மார் 20, 2025 00:49

கேவலமான திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் தினசரி நடந்து கொண்டு தான் உள்ளது.. மக்கள் காசுக்கு ஓட்டை விற்கும் கேவலமான நிலை மாறினால் தான் வழி பிறக்கும்


Mediagoons
மார் 19, 2025 23:27

ஜெயிலுக்கு போய்விட்டுவந்த ஆதங்கம்


K.Ramakrishnan
மார் 19, 2025 23:23

பழைய நினைப்பு தான் பேராண்டி.. பழைய நினைப்பு தான்...


முருகன்
மார் 19, 2025 22:51

தனிப்பட்ட விரோதங்களை எப்படி தடுப்பது என முன்னாள் காவல் துறை அதிகாரி ஆகிய உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கலாம்


மதிவதனன்
மார் 19, 2025 22:43

ஏம்பா சிரிப்பு போலீஸ் நீங்க அரெஸ்ட் ஆனவுடன் டெல்லி போகணும் ப்ளீஸ் விடுங்கள் என்று கெஞ்சினியய அவர் தான் தமிழ்நாடு போலீஸ் இப்போ சொல்லு ,குசுவத்தாமன் நான் டீ குடிக்க வந்தேன் என்று சொன்னாரே ஒரு போலோஸ் கிட்ட சொல்லல , VAANADHI ன்னு ஒரு அம்மணி அய்யா நான் அங்கு என் ஆளுங்க கூட சேர்ந்துகிறேன் என்று கெஞ்ச அப்படியே அல்லேகீ இறக்கி கைது செய்தார்களே அவர்கள் தான் TN போலீஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை