உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவன், பார்வதி தமிழரா? திருமா டவுட்

சிவன், பார்வதி தமிழரா? திருமா டவுட்

சென்னை: ''முருகன் தமிழ்க்கடவுள் என்றால், அவரது அப்பா சிவனும், தாய் பார்வதியும் தமிழர்களாகவே இருக்கக்கூடும். கயிலாய மலையும் தமிழர்களுக்கு தான் சொந்தம்,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.

அவர் கூறியதாவது:

ஹிந்து மதம் என ஒன்று கிடையாது; ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகே, ஹிந்து மதம் உருவானது. பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது. ஆனால், அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது ஹிந்து மதம். ஓட்டுக்காக, முருக பக்தர் என்று சொல்லி, மாய வலை வீச பார்க்கின்றனர். அவர்கள் சொல்லும் கதைப்படி, முருகன் தமிழ்க்கடவுள் என்றால், அவரது அப்பா சிவன் தமிழன்; பார்வதி தமிழச்சியாகத்தான் இருக்க வேண்டும். சிவன், பார்வதி தமிழர்கள் என்றால், கணேசனும் தமிழனாகத்தான் இருக்க முடியும். ஆனால், கணேசனை யாரும் ஏன் தமிழ்க்கடவுள் என்று சொல்வதில்லை. இந்த லாஜிக்கை கேட்டால், அவர்களுக்கு கோபம் வரும். சிவனும், பார்வதியும் கயிலாய மலையில் இருக்கின்றனர் என்றால், கயிலாயம் தமிழரின் தேசம் தானே. அப்படியென்றால் ஒட்டுமொத்த இந்தியாவும், தமிழர் தேசியம் தானே. கயிலாய மலை தமிழனுக்கு சொந்தம் என்றால், இமயம் முதல் குமரி வரை தமிழன் வாழ்ந்தான் என்பதற்கு சிவபெருமானே சான்று. இந்தியாவில் உள்ள ஜாதிய கட்டமைப்பை அணு ஆயுதங்களால்கூட அழிக்க முடியாது. அதனால்தான், இன்றைக்கும், நமது கட்சிக்கொடி கட்டவும், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் போராட வேண்டியுள்ளது. திருநீறை அழித்தது குறித்து பேசுபவர்கள், மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலுக்கு என்னை அழைத்துச் செல்ல முடியுமா? புண்ணியம் கிடைக்கும் என்ற நோக்கில் திருநீறு பூசவில்லை; அவமதிக்கும் வகையில் அழிக்கவும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இலவசங்களை அரசு நிறுத்தணும்!

அரசியல் ஆதாயத்திற்காக, பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்துள்ளது. அ.தி.மு.க., தொண்டர்கள், பா.ஜ., தொண்டர்களாக மாறி வருகின்றனர். எங்களை டீ, பன் கொடுத்து ஏமாற்றி விடலாம் என, கணக்கு போடாதீர்கள். '10 தொகுதிகளுக்கு மேல் கொடுத்து ஊக்கப்படுத்த மாட்டோம்' என்று பேசுவது, அவர்கள் மதிப்பீடு. 234 தொகுதிகளிலும் வி.சி., தகுதியான கட்சியாகவும், வலிமையாகவும் உள்ளது. எல்லா இலவசங்களையும் அரசு நிறுத்த வேண்டும். மதுக்கடைகளை மூட வேணடும். இவற்றை செய்ய முடியுமா எனக் கேட்டால், எங்களிடம் ஆட்சியை கொடுங்கள்; செய்து காட்டுகிறோம்.- திருமாவளவன், தலைவர், வி.சி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

venugopal s
ஜூன் 26, 2025 18:37

பேசாமல் இப்படி வைத்துக் கொள்வோம், சிவன் தமிழர், பார்வதி வட இந்தியர். காதல் திருமணம் செய்து கொண்டார்கள் என்று முடித்து விடுவோம்!


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 26, 2025 10:39

குருமா தமிழ் கடவுளாக இருந்தால் மட்டும் வணங்குவீர்களா ..வெளிநாட்டிலிருந்து வந்த கடவுள்களை என்ன செய்வது ..குருமா


surya krishna
ஜூன் 26, 2025 09:53

you, vanniarasu, R rasa, and appavu are crypto Christians. you people are not respected to hindu religion and hindu people, but you're enjoying Hindu's privileges. Hindu should not vote to this kind of people and political parties. THIS IS WAKE UP CALL HINDU PEOPLE


surya krishna
ஜூன் 26, 2025 09:47

pul poocchikkellaaam meesai mulaikkuthu. Hindu kadavulai tharakuraiva pesuranga


புரொடஸ்டர்
ஜூன் 26, 2025 08:57

எந்த கடவுள் தமிழர் என்று ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெறப்போகிறாயா திருமாவளவன்?


திருட்டு திராவிடன்
ஜூன் 26, 2025 08:40

நீங்க எல்லாம் ஹிந்துக்களை பற்றி கூறுவதற்கு அருகதை அற்றவர். மதம் மாறி உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நீர் இதையெல்லாம் பேசலாமா.


பேசும் தமிழன்
ஜூன் 26, 2025 07:20

அது இந்துக்கள் நாங்கள் பார்த்து கொள்கிறோம் .....மாற்று மதத்தை சேர்ந்த நீயெல்லாம் பேச கூடாது.....இவனுக்கு ஓட்டு போட்ட இந்துக்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்.


அப்பாவி
ஜூன் 26, 2025 07:07

இந்தியாவின் பழங்க்ய்டியினரின் தெய்வங்கள் மட்டுமே இந்திய தெய்வங்கள். மற்றவை எல்லாமே வந்தேறிகள்.


Ramaraj P
ஜூன் 26, 2025 06:41

அல்லா மற்றும் அல்லேலூயா எப்படி தமிழருக்கு கடவுளாக இருக்க முடியும்.


அப்பாவி
ஜூன் 26, 2025 06:38

சிவனும், பார்வதியும் வடக்ஸ். முருகன் அங்கிருந்து மாம்பழம் கிடைக்காம கோவிச்சிக்கிட்டு தெற்கே தமிழக மாம்பழ ரகங்களைக் கண்டு வியந்து இங்கேயே செட்டிலாகி, தமிழ் கற்று, தமிழ்ச்சங்கம் அமைத்தாரு. அதனாலேயே சங்கீ ஆனாரு. தமிழ்ச்சங்கம் மூணு இருந்திச்சு. ஒரு சமஸ்கிருத சங்கம் உண்டா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை