மேலும் செய்திகள்
குற்றங்களை மறைக்கும் போலீசால் புலம்புது சிட்டி
24-Jun-2025
சென்னை:'கருத்து சுதந்திரம் என்ற பெயரில், 'வானமே எல்லை' என்ற எண்ணத்தில், அரசியல்வாதிகளின் பேச்சுகள் அனைத்தையும், நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்காது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சென்னையில், தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நடந்த கூட்டத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். 'அவரது பேச்சு, பெண்களை இழிவுபடுத்துவதாகவும், மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் உள்ளதால், உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். அதன்படி பதிவான இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. முகாந்திரம் இல்லை
அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''பி.என்.எஸ்., என்ற பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்படி, புகார்கள் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்தால், புகாரை போலீசார் முடித்து வைக்கலாம். ''அதன்படி, இந்த வழக்கில் பொன்முடிக்கு எதிரான, நுாற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் முடித்து வைக்கப்பட்டன,'' என்றார். அதற்கு நீதிபதி, ''பொன்முடி மீதான புகார்கள் காவல் நிலையத்தில் முடித்து வைக்கப்பட்டாலும், தாமாக முன்வந்து எடுக்கப்பட்ட இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்,'' என்றார்.பின் நீதிபதி கூறியதாவது:மனுதாரர் மட்டுமல்ல, அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில், வானமே எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். அவர்களின் அவதுாறு பேச்சுக்களை, நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. அரசியல்வாதிகளும், அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும்.பொதுவாழ்க்கைக்கு வந்த பின், ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம் என்பதையும், இந்த நாடு அனைத்து குடிமக்களுக்குமானது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மதிப்பளிக்கணும்
ஆரம்பகட்ட விசாரணை என்பது, புகாரில் குறிப்பிட்ட சம்பவம் நடந்ததா, இல்லையா என்பது குறித்து விசாரிப்பது தான். அதன்பின் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும்.வேண்டாதவர்களுக்கு எதிராக புகார் வந்தால், அதில், முகாந்திரம் உள்ளதாக கூறும் நிலையில், ஆதரவாளர்கள் என்றால் முகாந்திரம் இல்லை என்கின்றனர். ஆரம்பகட்ட விசாரணை அடிப்படையில், புலன் விசாரணை அதிகாரி தீர்ப்பு எழுத முடியாது. 'மைக்' முன் பேசும் ஒவ்வொருவரும், தங்களை நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கின்றனர்.ராஜாவுக்கு எதிராக யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பது போல நினைக்கின்றனர். நீதிமன்றம் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்காது. பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதன்பின், 'பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்தது குறித்து, சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு, போலீசார் தகவல் தெரிவிக்க வேண்டும்.'இல்லாவிட்டால் அது தீவிரமாக எடுத்து கொள்ளப்படும்' என்று கூறிய நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட், 1ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
24-Jun-2025