உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் பகிரங்க சவால்

 என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் பகிரங்க சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளக்குறிச்சி அரசு விழாவில், மேடையேறிய முதல்வர் ஸ்டாலின், எனக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். அவர் மேடை போட்டு பேசிய கள்ளக்குறிச்சி மாவட்டமே, என் தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியில் தான் உருவானது. அவர் நின்று பேசிய, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி, அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை சொல்லும். அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களுக்கு, 'ரிப்பன்' வெட்டி, 'ஸ்டிக்கர்' ஒட்டுவதையே, 95 சதவீதம் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்; அவருக்கு 5 சதவீத திட்டங்கள் பற்றி கேள்வி கேட்க கொஞ்சம் கூட தகுதி இல்லை. தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது. எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என, அனைவரும் நடுத்தெருவில் போராடி வருகின்றனர். ஆனால், கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், சட்டை காலரை துாக்கி விட்டு, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். இருபது லட்சம் மாணவர்களுக்கு, 'லேப்டாப்' என போகிற போக்கில் அளந்து விட்டால், தமிழக மக்கள் நம்பி விடுவரா; எத்தனை 'லேப்டாப்' யாருக்கு போய் சேர்ந்தது? நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல், தேர்தல் பயத்தால், தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமையாக பேசுவதற்கு கூச்சப்பட வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மூச்சிரைக்க வாசித்த பட்டியல் என்பது, அவர் நடத்திய 'போட்டோ ஷூட்'களின் பட்டியல். அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், எத்தனை நிறைவேற்றப்பட்டது என்பதையும், வாசிக்கத் தயாரா? எனக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். ஆனால், பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த சவால் நிலுவையில் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் என்னோடு, நேருக்கு நேர் மேடை ஏறி விவாதிக்க தயாரா? அ.தி.மு.க., ஆட்சி பற்றி, அவர் என்ன கேட்டாலும் பதில் சொல்ல நான் தயார். தி.மு.க., ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லத் தயாரா? முதல் கேள்வியாக, 'நீட்' தேர்வு ரத்து என்ன ஆச்சு என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

மணியன்.
டிச 28, 2025 08:17

தமிழக மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்க அண்ணாமலையை தடுக்க பங்காளி ஸ்டாலினுடன் கள்ளகூட்டணி அமைத்துள்ள துரோகி எடப்பாடி.


Kasimani Baskaran
டிச 28, 2025 05:41

பங்காளிகளுக்குள் பொது வெளியில் எதற்கு வீண் சண்டை? சட்டசபைக்குள் சண்டையை வைத்துக்கொள்ளலாம்.


V K
டிச 28, 2025 05:37

இந்த ரெண்டுமே ஊழல் பெருச்சாளிகள்


முருகன்
டிச 28, 2025 05:16

என் திட்டம் நாங்கள் உருவாக்கியது அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் நடைமுறை படுத்தியது மக்கள் தான் உரிமை கொண்டாட வேண்டும்


vivek
டிச 28, 2025 06:48

எந்த திட்டம் ஒண்ணு ஒண்ணா சொல்லுங்க...மக்கள் தெரிஞ்சுகட்டும்


Palanisamy Sekar
டிச 28, 2025 02:20

ஹ்ம்ம் அதெல்லாம் முதல்வருக்கென்று ஒரு தனி பாணி உண்டு. எடப்பாடி அவர்கள் அவர் கேட்கப்பட இருக்கும் கேள்விகளை பற்றிய பட்டியலை எண்கள் அடிப்படையில் எழுதி அனுப்பிவிடவேண்டும். அதன் பிறகு மூன்று நாட்களுக்கு பிறகுதான் முதல்வர் மேடையில் துண்டு சீட்டை பார்த்து படித்து பதிலாக சொல்வார். அதற்கு எடப்பாடி அவர்கள் தயாரா என்று சொல்லவேண்டும். துண்டு சீட்டை பார்த்த படிக்கும்போது தடுமாறினால் சிரிக்கவே கூடாது என்கிற நிபந்தனையை ஏற்பாரா? அதிலும் முதல்வருக்கு நிறைய வேலை வேறு இருக்குதாம், சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வேறு து முதல்வர் உ நிதியின் ரெட் ஜெயண்ட் வெளியீடு செய்வதால் அதனை பார்க்க போகணும். அப்புறம் விஜய்யின் ஜனநாயகம் படம் வேறு வருகிறதாம் அதை வேறு யாருக்கும் தெரியாமல் பார்க்க வேண்டும். அதனால் அவர் ரொம்ப பிசி. இவ்வளவு காரணத்தை சொல்லி வேலையில்லாத எதிர்க்கட்சி தலைவரின் சவாலை புறக்கணித்தார் முதல்வர்ர்ர்


Kadaparai Mani
டிச 28, 2025 10:03

Good comment


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி