உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரின் பதிலை கேட்கும் மக்களின் காதுகள் பாவமில்லையா: இ.பி.எஸ்., விமர்சனம்

முதல்வரின் பதிலை கேட்கும் மக்களின் காதுகள் பாவமில்லையா: இ.பி.எஸ்., விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'குற்றங்களைத் தடுக்க, குற்றத்தை செய்யவே குற்றவாளிகள் அஞ்சி நடுங்கும் அளவிற்கு அரசின் காவல் அமைப்பு வலுவாக இருக்க வேண்டும். இதனை செய்ய நிர்வாகத் திறமை வேண்டும். ஆனால், இங்குள்ள பொம்மை முதல்வருக்கு நிர்வாகத் திறன் என்பது தான் துளியும் இல்லையே?' என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவரது அறிக்கை; தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே கீழப்புலியூர் பகுதியில் ரேஷன் கடை அருகே குத்தாலிங்கம் என்பவர் தன் மனைவியின் கண்முன்னே மர்மநபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதே போல், சேலம் பழைய பஸ் ஸ்டாப்பில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.ஸ்டாலின் மாடல் தி.மு.க., ஆட்சியில் பொது இடங்கள் எல்லாவற்றிலும் 'இது மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல!' என்று பதாகைகள் வைக்கப்பட வேண்டும் என்ற அளவில் தான் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு இருக்கிறது. தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படி ஒரு நிலை இருப்பதற்கு ஒரு முதல்வராக ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்! ஆனால் அவர்?தனிப்பட்ட பிரச்சனை, குற்றவாளிகள் கைது என்ற உங்கள் Template பதில்களைக் கேட்கும் மக்களின் காதுகள் பாவமில்லையா? 'சட்டம்- ஒழுங்கு' என்பது கைது செய்வது மட்டுமல்ல; குற்றங்களைத் தடுக்க, குற்றத்தை செய்யவே குற்றவாளிகள் அஞ்சி நடுங்கும் அளவிற்கு அரசின் காவல் அமைப்பு வலுவாக இருக்க வேண்டும். இதனை செய்ய நிர்வாகத் திறமை வேண்டும். ஆனால், இங்குள்ள பொம்மை முதல்வருக்கு நிர்வாகத் திறன் என்பது தான் துளியும் இல்லையே?'குற்றவாளிகளின் கூடாரம்' என்ற நிலையில் இருந்து மாறி மீண்டும் 'அமைதிப் பூங்கா' என்ற நிலைக்கு தமிழகம் மாற, தி.மு.க., ஆட்சி வீழ்ந்து, தமிழ்நாடு மாடல் அ.தி.மு.க., ஆட்சி அமைவது ஒன்றே வழி! மேற்கூறிய குற்றச் சம்பவங்களில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

RRatz
ஏப் 22, 2025 14:28

இனி வரும் கால கட்டத்தில்: கெத் +அடி + மை =??


தமிழ் மைந்தன்
ஏப் 17, 2025 07:07

ஒரு கோமாளிக்கு வக்காலத்து


Appan
ஏப் 17, 2025 06:49

அதிமுகவுக்கு இப்போ தேவை ஒரு ஆளுமை மிக்க தலைவர்.. காலில் விழுந்து ஆட்சிக்கு வருவது தமிழகத்தை விற்பதற்கு சமம்.ஏன் இப்பவே இபிஎஸ் தமிழகத்தை பிஜேபிக்கு அடகுவைத்து விட்டார். பின் எப்படி நல்ல ஆட்சி கொடுக்க முடியும் ..?


Kjp
மே 14, 2025 17:50

இப்ப என்ன நல்லாட்சியா நடந்து கொண்டு இருக்கிறது.யார் வெட்கி தலை குனிய வேண்டும் என்று இபிஎஸ் சரமாரி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் உருட்டுவதே உங்கள் வேலையாகி போய் விட்டது.


pmsamy
ஏப் 17, 2025 06:43

பழனிச்சாமி சொல்றது யாரும் கேட்கிறது கூட இல்லை பாவம் பழனிச்சாமி


Kasimani Baskaran
ஏப் 17, 2025 04:00

அண்ணாமலை வெளியேறிய பின்னர்தான் இவருக்கு தான் எதிர்க்கட்சி தலைவர் என்பது புரிந்திருக்கிறது...


Oviya Vijay
ஏப் 17, 2025 00:00

மக்கள் தன்னை ஒரு டம்மி பீஸ் என நினைக்கிறார்கள் என்பதை எடப்பாடி எப்போது தான் உணர்வாரோ???


தமிழ் மைந்தன்
ஏப் 17, 2025 07:09

ஒரு டம்மி பீஸ் கோமாளி யார் என்பது மக்களுக்கு தெரியும். ஆனால் கொத்தடிமைகளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை ராஜா


மதிவதனன்
ஏப் 16, 2025 23:55

அவராவது கவர்னர் ஐ எதிர்த்து APEX கோட்டில் ஆப்பு அடிக்க வைத்து விட்டார் நீரா இருந்தால் ஆமாம் சாமி போட்டு கொண்டு இருப்ப ,


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஏப் 16, 2025 23:23

இந்த எதிர்கட்சி தலைவர் பேசும் உளறல்களை கேட்கும் மக்கள் தான் பாவம்


Ram, Chennai
ஏப் 16, 2025 23:46

Edappadi is far better than Stalin


raja
ஏப் 17, 2025 01:04

அட கூமுட்டை கொத்தடிமையே உண்மையை கூறினால் உளறல் என்கிறாயே...


மீனவ நண்பன்
ஏப் 17, 2025 01:16

பெயரை தமிழில் எழுத துப்பில்லை


Oviya Vijay
ஏப் 16, 2025 22:56

2026 தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தில் மாநிலம் முதல் சென்ட்ரல் வரை அனைத்து மீடியாக்களும் பேசப்போகும் டாபிக் என்ன தெரியுமா? MGR உருவாக்கி ஜெயலலிதா கட்டிக்காத்த ஒரு மாபெரும் இயக்கத்தின் வீழ்ச்சியைப் பற்றியது தான். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 2026 தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளில் என் வாக்கு பலித்திருக்கும்... ஜெயா டிவி, நியூஸ் J அனைத்திலும் முகாரி ராகம் ஒலித்துக் கொண்டிருக்கும்...


Thetamilan
ஏப் 16, 2025 22:55

மோடி சா மற்றும் அவர்களின் கூட்டாளிகள் கூறுவதை கேட்கும்போது மற்றவர்கள் கூறுவதை கேட்க மாட்டார்களா?


சமீபத்திய செய்தி