மேலும் செய்திகள்
அர்ஜூன் சம்பத் மகன் கைது
13-Nov-2024
சென்னை : நக்கீரன் இதழ் ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மகனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.கோவை ஈஷா மையம் குறித்து அவதுாறு பரப்புவதாக, நக்கீரன் இதழைக் கண்டித்து, கோவையில், கடந்த மாதம் 27 ம் தேதி, ஹிந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அக்கட்சி தலைவரான அர்ஜுன் சம்பத் மகனும், இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி, பங்கேற்று பேசினார். நக்கீரன் இதழ் ஆசிரியருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், அவர் பேசியதாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இந்த வழக்கில் முன்ஜாமின் கோரிய ஓம்கார் பாலாஜி மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். தினசரி காலை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி நிபந்தனை விதித்து, ஓம்கார் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார்.
13-Nov-2024