UPDATED : நவ 10, 2024 12:27 PM | ADDED : நவ 10, 2024 11:55 AM
கோவை: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜியிடம் கோவை போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்புவதாக வார பத்திரிகை ஒன்றை கண்டித்து கோவையில் கடந்த 27 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஓம்கார் பாலாஜி, அந்த பத்திரிகை ஆசிரியரை மிரட்டும் வகையில் பேசியதாக, அப்துல் ஜலீல் என்பவர் போலீசில் புகார் அளித்து இருந்தார். இதனடிப்படையில், ரேஸ்கோர்ஸ் சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து ஓம்கார் பாலஜி சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் தாக்கல் செய்து இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=75nwha8c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், நேற்று அவரை போலீசார் கைது செய்ததாக இந்து மக்கள் கட்சி கூறியுள்ளது. இதனை கண்டித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.ஆனால், ஓம்கார் பாலாஜி கைது என்பதை போலீசார் மறுத்துள்ளனர். அவரிடம் விசாரணைக்கு பிறகு போலீசார் விடுவித்தனர்.