உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை

ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ரவுடி சீசிங் ராஜா இன்று (செப்.,23) என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 10க்கும் அதிகமான வழக்குகளில் சிசிங் ராஜா மீது பிடிவாரன்ட் நிலுவையில் உள்ளது.ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜாவை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் இன்று(செப்.,23) சென்னை நீலாங்கரை அருகே போலீசாரை தாக்கி விட்டு, தப்பிக்க முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zo76abjd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

யார் இந்த சீசிங் ராஜா?

* ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்கு உட்பட 32 வழக்குகள் உள்ளன. இவரை பல்வேறு வழக்குகளில் போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

இணை கமிஷனர் பேட்டி!

ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் நடந்தது என்ன என்பது குறித்து, நிருபர்கள் சந்திப்பில், சென்னை தெற்கு இணை கமிஷனர் சி.பி.,சக்ரவர்த்தி கூறியதாவது: சீசிங் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. * 10க்கும் அதிகமான வழக்குகளில் சிசிங் ராஜா மீது பிடிவாரன்ட் நிலுவையில் உள்ளது. 30க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன அவரை தேடி வந்தோம்.* வேளச்சேரி பார் ஊழியரை மிரட்டிய வழக்கில்,சீசிங் ராஜாவை தேடி வந்த நிலையில் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். * வேளச்சேரி வழக்கில் துப்பாக்கியை பறிமுதல் செய்ய அழைத்து சென்ற போது அவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்காப்புக்காக போலீசார் சுட்டத்தில் ரவுடி சீசிங் ராஜா உயிரிழந்தார். * இவருக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும், தொடர்பு இருப்பதாக தெரிய வில்லை. வழக்கில் கைது செய்தால் குடும்பத்தை விட்டு வீடியோ வெளியிடுவது டிரெண்டாக உள்ளது. * நாங்கள் விசாரிக்கவே கைது செய்தோம். அவர் தாக்கியதால் தான் என்கவுன்டர் சூழல் உருவானது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

அப்பாவி
செப் 23, 2024 17:27

கோர்ட், வழக்குன்னு போனா நீதி கிடைக்கும்னு தெரியலை. இவன் வெளியே இருந்தா போட்டுத்தள்ள எட்டு பேர் ரெடியா இருப்பாங்க. தவிர, இவன் எந்த தேசிய கட்சியில் தலைவர்னு தெரியாது. நாட்டுக்கு நல்லது. கோர்ட்டுக்கு ஒரு வழக்கு மிச்சம். அந்தப் பகுதி மக்களுக்கு நிம்மதி கிடைச்சிருக்கு.


skrisnagmailcom
செப் 23, 2024 14:03

அதெப்படி ரவுடினு தெரியும் அரெஸ்ட் பண்ணி கூப்பிட்டு போகும்போது அவர் கையில் ஆயுதம் எப்படி வந்திருக்கும் எப்படி தாக்க முயன்றிருக்க முடியும்?


Apposthalan samlin
செப் 23, 2024 12:21

இதே மாதிரி ரவ்டிகளை olithu கட்ட வேண்டும் மாதம் 25 encounter பண்ண வேண்டும் முளையிலே கிள்ளி எரிய வேண்டும்


RAJ
செப் 23, 2024 12:12

ஒன்னு மட்டும் நிச்சயம் ... கண்டிப்பா 3000வருஷம் முடியரதுக்குள்ள கடைசி குற்றவாளி கைமா செய்யப்படுவார்... மக்களே dont worry


tamilan
செப் 23, 2024 11:59

அவனை உயிரோட பிடிச்சா தானே அவனுக்கு பின்னால் இருக்கும் பெரும்புள்ளி அகப்படுவான். அவனாக தப்பித்து போனானா? இல்லை ஓடவிட்டு சுட்டுகொன்னாங்களா


Kanns
செப் 23, 2024 11:08

Another Fake Encounter Murder with Blessings of Judges to Shield Real Culprits-VCK, Power -Misusing Rulers & their Goondas And Mislead GansterArmstrong Murder Case. Punish All Concerned Police& Associated Goondas With Public Death by Burning Without Mercy


sankar
செப் 23, 2024 10:52

கல்கத்தா தீதி பாணி?


Ganapathy Subramanian
செப் 23, 2024 09:57

ஆற்காடு சுரேஷின் கொலைக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று சிலர் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். அந்த உண்மை வெளியில் வராமல் இருக்க சிலரை என்கவுன்ட்டர் செய்கின்றனர் போலும்.


சாம்
செப் 23, 2024 09:45

பெரும்பகையா அல்லது பீகா் சாபு வா யாரைக் காப்பாற்ற??!!


V RAMASWAMY
செப் 23, 2024 09:38

Encounter is a good step towards controlling and minimizing crimes, but in certain cases like murder due to political reasons, encounter should be thought of only after eliciting truth about who is behind all these.


சமீபத்திய செய்தி