மேலும் செய்திகள்
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் பணியிட மாற்றம்
21-Feb-2025
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பள்ளத்துரை சேர்ந்தவர் பழனி என்ற பழனிச்சாமி. இவர் மீது 2023ம் ஆண்டு காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.அப்போது இங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் சாட்சி சொல்ல வரவில்லை. இதைத் தொடர்ந்து அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார். சில்வியா ஜாஸ்மின் தற்பொழுது மதுரை கூடல் புதூர் போலீஸ் ஸ்டேஷனில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.
21-Feb-2025