உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ல் சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

2026ல் சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசத்தை 4 நாட்கள் நீட்டித்து, அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. வழக்கமாக ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான், அரசியல் கட்சிகள் தேர்தலை நோக்கி வேகமெடுத்து செயல்படும். டிசம்பர் மாதத்தின் மத்தியிலேயே, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி விறுவிறுப்பு காட்டி வருகின்றன. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வினியோகத்தை டிசம்பர் 15ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடங்கிவைத்தார். டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டனர். தற்போது அதிமுகவில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து, இபிஎஸ் அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கட்சியினர் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, டிசம்பர் 28ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் டிசம்பர் 31ம் தேதி புதன் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கட்சியினர் அதற்கான படிவங்களை பெறலாம். அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி