உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீரர் - வீராங்கனையருக்கு ரூ.1 கோடியில் உதவிகள்

வீரர் - வீராங்கனையருக்கு ரூ.1 கோடியில் உதவிகள்

சென்னை:தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ள 13 பேருக்கு, 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.தமிழக விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கான பயிற்சி, உபகரணங்கள், வெளிநாடுகளுக்கு செல்லும்போது ஏற்படும் செலவுத்தொகை உள்ளிட்டவற்றை வழங்கும் வகையில், தனியார் பங்களிப்புடன், 'தமிழ்நாடு சாம்பியன்ஸ்' அறக்கட்டளை செயல்படுகிறது. அதிலிருந்து கடந்த மூன்றாண்டுகளில், 3,350 வீரர் - வீராங்கனையருக்கு, 110 கோடி ரூபாய் அளவில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், 13 விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு, 1 கோடியே 36,312 ரூபாய் மதிப்பிலான விளையாட்டு மேம்பாட்டு நலத்திட்ட உதவிகளை, துணை முதல்வர் உதயநிதி நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை