உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பாடா! ஒரு வழியாக இரு ‛‛போராளி நடிகர்கள் வாய் திறந்தனர்: முதல்வர் பெயரை குறிப்பிடாமல் சூர்யா கண்டனம்

அப்பாடா! ஒரு வழியாக இரு ‛‛போராளி நடிகர்கள் வாய் திறந்தனர்: முதல்வர் பெயரை குறிப்பிடாமல் சூர்யா கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக 'கள்ள மவுனம்' காத்து வந்த 'போராளி' நடிகர்களில் இன்று (ஜூன் 21) நடிகர்கள் சூர்யா, பார்த்திபன் ஆகியோர் கள்ள மவுனத்தை களைத்து கருத்துக்கூற வாய் திறந்துள்ளனர்.போராளிகள் போல் காட்டிக்கொள்ளும் சில சினிமா நடிகர்கள், இனம், மொழி, ஜாதி பற்றியெல்லாம் பேசி, அரசுகளை விமர்சிப்பது வழக்கம். அதிலும், இவர்களிடம் சிக்குவது அதிமுக, பாஜ அரசுகள் தான். திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் இவர்கள் எதற்கும் கருத்து சொல்லாமல் காணாமல் போய்விடுவர். தற்போது தமிழகத்தையே உலுக்கியுள்ள கள்ளச்சாராய மரணம் பற்றி இந்த போராளி நடிர்கள் இரண்டு நாட்களாக எதுவும் பேசாமல் ‛‛கள்ள மவுனம்'' காத்தனர். இவர்களைக் கண்டித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விளாசி தள்ளினர். இது தொடர்பாக தினமலர் டாட் காமில் ''கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்?'' என்ற தலைப்பில் நேற்று (ஜூன் 20) செய்தி வெளியிட்டோம். (அந்த செய்தியை படிக்க கிளிக் செய்யவும்)

பார்த்திபன்

அதன்பிறகு ஒவ்வொருவராக தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவ்வபோது ஏதாவது சமூக கருத்துகளை தெரிவித்து வரும் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எதற்கு 10 லட்சம் ரூபாய்? என்ற ரீதியில் 'கள்ளச் சா.....வுக்கு எதுக்கு, நல்லச் சாவு (10 லட்சம்)? எனப் பதிவிட்டுள்ளார்.இவ்வளவு தான் அவர் சொன்னது. அதற்கு மேல் எதுவும் சொல்வதற்கோ தமிழக அரசை கண்டிக்கவோ அவருக்கு தைரியம் இல்லை போல!

சூர்யா

அதேபோல், நடிகர் சூர்யாவும் இரண்டு நாள் மவுன விரதத்திற்குப் பிறகு, தமிழக ஆட்சி நிர்வாகத்தை கண்டிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இது பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நீண்ட கால பிரச்சனைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது. வாழ்வை மேம்படுத்துவார்கள் என நம்பி ஓட்டளிக்கும் தமிழக மக்களை, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கிற அவலத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 'மதுவிலக்கு கொள்கை' என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்துவிடுகிறது. அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும். சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

பெயரை குறிப்பிடவில்லை

அறிக்கையில் சூர்யா, ‛‛ஆட்சி நிர்வாகத்தை'' என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளாரே தவிர, 'ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி'' அல்லது ‛‛திமுக அரசு'' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. ஆட்சி நிர்வாகம் என்றாலே முதல்வர் ஸ்டாலின் நிர்வாகம் என்று நாமே புரிந்துகொள்ள வேண்டியது தான்.முதல்வரின் பெயரையோ கட்சியின் பெயரையோ குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை என்று ரசிகர்கள் கிண்டல் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 88 )

Harindra Prasad R
ஜூன் 28, 2024 09:51

சித்தார்த், பிரகாஷ்ராஜ், சிவகுமார் குடும்பம் இவர்கள் மூவரும் டி-Monidation இல் பலமாக பணத்தை இழந்துள்ளனர் என்பது தெள்ள தெளிவாக தெரிய வருகிறது அதனால் தான் போராளிகள் என்ற போர்வையில் BJP யை வெறிபிடித்து தாக்குகிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரிய வருகிறது..


vidhu
ஜூன் 25, 2024 12:09

இவனுங்க படத்தை பார்க்காமல் ஒரு டிக்கெட் கூட புக் ஆகாமல் காத்து வாங்கிட்டு theatre இருப்பது தான் இவனுங்களை போல் உள்ள குறிப்ப சித்தார்த், பிரகாஷ்ராஜ், சிவகுமார் குடும்பம் எல்லாருக்கும் ஒரு படிப்பினை. எங்க ரசிகர்கள் தான் பால் அபிஷேகம் பண்ண போய்டறாங்களே அப்புறம் இவனுங்களுக்கு எங்க பாடம் எடுக்கறது. கூத்தாடிகளுக்கு சொம்பு தூக்கறதை எப்போ நிறுத்தறோமோ அப்போதான் நமக்கு விடியும். அதுவரை வீடியா ஆட்சி தான்.


Guna Gkrv
ஜூன் 24, 2024 06:47

இதற்க்கு எதுக்கு கருத்து சொல்ல வேண்டும் சாராயம் குடித்தால் மரணம் உறுதி என்பது தெரியும் அப்படி இருந்தும் குடிப்பது என்பது அவர்களின் திமிர், இதற்க்கு ஏன் வரிந்து கட்ட வேண்டும், பணம் சம்பாரிக்க வழியில் இதுவும் ஒரு வழி அதை மக்கள் தான் திருந்த வேண்டும் ஆயிரம் பெயர் செத்தாலும் அதைத்தான் குடிப்பான் அவனுக்கு தேவை போதை, சாவோம் என்று தெரிந்தும் குடிப்பவனை என்ன செய்வது? வாங்குறவன் இருப்பதால் விற்கிறான், யாரும் வாங்கவில்லை என்றால் விற்பவன் காணாமல் போய்விடுவான்.


pattikkaattaan
ஜூன் 23, 2024 10:41

இன்றைக்கு போராடும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் யாரும் கள்ளக்குறிச்சி பகுதியில் இல்லையா? கள்ளச்சாராயம் விற்பனை பல ஆண்டுகளாக நடக்கும்பாேது ஏன் இவர்கள் போராட்டமாே அல்லது புகாராே தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் அல்லது உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கலாம். இத்தனை நாட்கள் வாய்மூடி இருந்ததால் எல்லாரும் கூட்டுக் களவாணிகள்தான் என்பதை மக்கள் உணர்ந்துகாெள்ள வேண்டும்


Sengu
ஜூன் 23, 2024 10:13

நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழுது விடு என்பது போலத்தான் இவர்களுடைய கருத்துக்கள் எல்லாம்


Raj
ஜூன் 22, 2024 17:55

அரிதாரம் பூசிய அவதாரங்கள் மிக சிறந்த நடிப்பு திலகங்கள்


Raj
ஜூன் 22, 2024 17:49

உருட்டு செம உருட்டு விளங்காத மனுஷங்க. பொங்கி பேச இப்போ முடியாதில்லையா.


JEEVAKUMAR RADHAKRISHNAN
ஜூன் 22, 2024 13:44

இவனுங்க எல்லோருமே திருட்டு பசங்க மானம் ஈனம் எல்லாம் இவனுங்களுக்கு கிடையாது???


நீலமேகம், கோவை.
ஜூன் 22, 2024 12:57

தமிழ் மக்கள் மாற வேண்டும். இந்த நடிகர்கள் எதற்குமே லாயக்கு இல்லாதவர்கள்.(ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் நடிப்பதற்கு கூட)நிஜ வாழ்க்கையில் நன்கு நடிக்கும் நாணயமற்றவர்கள்.


rasaa
ஜூன் 22, 2024 12:04

சிங்கம் 1,2,3 எல்லாம் சினிமாவில்தான்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி