மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
04-Oct-2025
திருவேற்காடு திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், நிறைமணி காட்சி விழா துவங்கியது. திருவேற்காடு, சன்னிதி தெருவில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தை ஒட்டி மூன்று நாட்கள் நிறைமணி காட்சி விழா நடக்கிறது. 'மழை பெய்து உலகம் செழிக்க வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும், ஜீவராசிகள் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும்' என்பன உள்ளிட்ட மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் வகையில், நிறைமணி விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான விழா நேற்று துவங்கியது. இதற்காக, கோவில் கருவறை, முன் மண்டபம் பகுதியில் வாழைப்பழம், அன்னாசி பழம், மாதுளம் பழம், ஆப்பிள் போன்ற பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட 5,000 கிலோ பொருட்கள், பந்தல் போல் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
04-Oct-2025