உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாக்டர்கள் மீதான தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது: கவர்னர் ரவி கண்டனம்

டாக்டர்கள் மீதான தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது: கவர்னர் ரவி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை கிண்டி மருத்துவமனையில் டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கவர்னர் ரவி கண்டனம் தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:டாக்டர் பாலாஜி மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதுடன் வன்மையாக கண்டிக்கத்தக்கது. டாக்டர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை, குறிப்பாக மருத்துவமனைகளில் உறுதிப்படுத்த அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள் அவசியம். மருத்துவர் பாலாஜி விரைவாக உடல்நலம் பெற வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் ரவி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
நவ 13, 2024 22:38

நோயாளி அதுவும் வயதான பெண். எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.


அப்பாவி
நவ 13, 2024 22:36

அப்ப மத்தவங்க மேலே தாக்குதல் நடத்துனா ஏத்துப்பீரா? அபத்தமா இருக்கே.


hari
நவ 13, 2024 23:16

என்ன மொக்க உளறல் இது அப்பாவி


Bala
நவ 13, 2024 22:34

மருத்துவர்கள் மட்டும் அல்ல , எவர் மீதும் தாக்குதல் கண்டனத்தக்குறியது. ஆனால் பல அரசு மருத்துவர்கள் நோயாளிகளை மிக கேவலமாக நடத்துகின்றனர். இலவச மருத்துவம் என்பது ஏதோ இவர்கள் தந்தை துணை முதல்வர் பாழயில் அப்பன் வீட்டு பணம் என்று நினைக்கின்றார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை