உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசார் மீது தாக்குதல்: சேலத்தில் 12 பேர் கைது

போலீசார் மீது தாக்குதல்: சேலத்தில் 12 பேர் கைது

சேலம்: சேலம் அம்மாபேட்டையில், மோசடி புகார் குறித்து விசாரிக்கச் சென்ற பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக, 12 பேர் கைது செய்யப்பட்டனர்.சேலம் மாநகரம், அம்மாபேட்டை, காமராஜர் நகர் காலனி உள்ள பி. எஸ்.கே. சிவகாமி திருமண மண்டபத்தில் இயங்கி வரும் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையில் பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்து வருவது சம்பந்தமாக போலீஸ் உயரதிகாரிகளுக்கு புகார்கள் குவிந்தன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4klt9fkw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உளவு அமைப்புகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அரசுக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அறிக்கை அளித்தனர். அந்த அறிக்கையில், அன்னை தெரசா அறக்கட்டளைக்கு, வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதும், அதனை கணக்கில் காட்டும் வகையில் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதும் தெரியவந்தது. இந்த அறிக்கையின் பேரில், நேற்று மாலை 4 மணியளவில், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி ஆகியோர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு திருமண மண்டபத்துக்கு விசாரிக்க சென்றது.அங்கு இருந்தவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததோடு, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் செல்போன்களை பிடுங்கி வைத்துக்கொண்டு அவர்களிடம் தகராறு செய்து தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேலம் மாநகர போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் திருமண மண்டபத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன் அங்கு அறக்கட்டளை என்னும் பெயரில் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலையும், தாக்குதல் நடத்தியவர்களையும் குண்டுகட்டாக போலீசார் தூக்கி வந்தனர். இந்த சம்பவ குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஏட்டு கலைச்செல்வி (42), அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், தாதம்பட்டியைச் சேர்ந்த, மைக்கேல்,45, மரவனேரி மோகன்ராஜ் 37, விஜய் அமிர்தராஜ்,45, பொன்னம்மாப் பேட்டை விஜய் அமிர்தராஜ், 45, சின்ன திருப்பதி சேர்ந்த அருள்ராஜ் ,47, அதே பகுதியைச் சேர்ந்த பியூலா,45, அம்மாபேட்டையை சேர்ந்த கோமதி,35, மறவன் ஏரியைச் சேர்ந்த எம். ந. கோமி, 30, பெரிய வீராணத்தைச் சேர்ந்த தேன்மொழி,34, வேலூர் மாவட்டம் சத்துவாஞ்சேரியைச் சேர்ந்த தேவிகா,49, அம்மாபேட்டையை சேர்ந்த அம்மு குட்டி,43, பொன்னம்மாபேட்டியைச் சேர்ந்த மதலை மேரி,37, பெரிய வீராணத்தைச் சேர்ந் அமுதா,47, ஆகிய 12 பேர் மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Selvaraju P
ஜன 30, 2025 13:42

தமிழகத்திலும் சரி மற்ற மாநிலங்களிலும் சரி அரசியல்வாதிகளை துணையுடன் செயல்படுகிறார் அனைத்து சேவை மையங்களும் தவறு செய்கின்றது என்பது உண்மை இதை கோர்ட்டும் அரசும் கண்டு கொள்வதில்லை இதனால் பாதிக்கப்படுவது பாமர மக்கள் மட்டுமே


Selvaraju P
ஜன 30, 2025 13:40

தமிழகத்திலும் மற்றும் இந்தியாவிலும் உள்ள அரசியல்வாதிகளின் ஆதரவுடன் செயல்படும் அனைத்து மத சேவை மையங்கள் தவறு செய்கின்றது. இது உண்மை. அவர்களை அவர்களைத் தண்டிக்கவோ தடுக்கவும் நீதிமன்றங்களும் செயல்படுவதில்லை மேலும் ஓட்டுக்காக அரசியல்வாதிகளும் ஆதரவு தருகிறார்கள் இதனால் நாட்டிற்கும் பாமர மக்களுக்கும் கேடு விளைவிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை


Kumar
ஜன 25, 2025 18:21

திமுக உள்ளவரை இவர்களை ஒன்னும் பண்ணமுடியாது


B MAADHAVAN
ஜன 25, 2025 15:32

ஈரை பேனாக்கி, பேனை பெரியானாக காட்டும் அரசு இருக்கும் வரை இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. நாளை இது போல் ஒரு சம்பவமே நடைபெறாதது போல ஒரு மாயையை உண்டு பண்ணி விடுவார்கள். அரசு அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும், உண்மையை உலகுக்கு உணர்த்தும் திறமை இருந்தாலும், வாய்ப்பு மறுக்கப் படும் என்பது தான் இன்றைய தமிழக நிலைமை.


Raj
ஜன 24, 2025 15:55

கஞ்சிக்கும் கேக்குக்கும் அலையிற கட்சிகள் இருக்கிற வரைக்கும் இவங்கள எதுவும் பண்ண முடியாது. அதனாலதான் போலீசயே தாக்குறான்க


Natchimuthu Chithiraisamy
ஜன 24, 2025 14:02

ஒரு போன் வந்தால் போதும் அணைத்து போலீசும் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள். இதுவரை செய்த செயலே மிக பெரிது வாழ்க துணிவுள்ள போலீஸ் டீம்


ram
ஜன 24, 2025 13:57

சிறுபான்மை ஆட்கள் திருட்டு திமுக ஒன்னும் செய்யாது


Ray
ஜன 24, 2025 19:07

டில்லி உள்ள பூந்துடுமே IT ED NIA எல்லாம் எதுக்கு இருக்கு பன்னிரண்டு பேரின் தாத்தா பாட்டின்னு அத்தனை உறவுகள் நண்பர்கள் வீடுகளிலும் ரெய்டு விடுவாங்க முடிவாக பல சொத்துக்கள் "நாட்டுடைமையாக்கப்படும்" அந்த நூறு கோடி அபராதம்தான் எங்கே போனதுன்னு தெரியலை


சம்பா
ஜன 24, 2025 12:35

விட்டுடுவானுக ஒன்றும் ஆகாது ஏன்னா அவங்க தயவால