கவன ஈர்ப்பு தீர்மானம்; சபாநாயகர் புது உத்தரவு
சென்னை: ''சட்டசபையில் விவாதத்திற்கு வரும் முன்பே, கவன ஈர்ப்பு தீர்மானங்களை எம்.எல்.ஏ.,க்கள் வெளியிடக் கூடாது. ஊடகங்களும் அதை பிரசுரிக்கக் கூடாது,'' என, சபாநாயகர் அப்பாவு கூறினார்.சட்டசபையில் நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பு:என்னிடமோ, சட்டசபை செயலரிடமோ, எம்.எல்.ஏ.,க்கள் எழுதிக் கொடுக்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளிட்ட அலுவல்களை, உடனடியாக சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர்; ஊடகங்களுக்கும் கொடுக்கின்றனர்.சட்டசபை விதிப்படி இப்படி வெளியிடக் கூடாது. எனவே, இனி எம்.எல்.ஏ.,க்கள் கொடுக்கும் கவன ஈர்ப்பு தீர்மானங்களை, சட்டசபையில் விவாதத்திற்கு வரும் முன், சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது. ஊடகங்களும் அவற்றை பிரசுரிக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.