உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயியை தாக்கிய எஸ்.ஐ.,க்கு ஆணையம் ரூ.50,000 அபராதம்

விவசாயியை தாக்கிய எஸ்.ஐ.,க்கு ஆணையம் ரூ.50,000 அபராதம்

சென்னை:நெல்லை மாவட்டம், மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கஸ்பார் வில்லியம், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:கடந்த 2018 செப்டம்பர் 23ல், எங்களது விவசாய நிலத்தை சேதப்படுத்தி, தனியார் காற்றாலை நிறுவனம் ஒன்று பாதை போட்டிருந்தது.இதற்கு மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், அவரது மகன் ஞானப்பிரகாசம் அந்நிறுவனத்திற்கு உதவியுள்ளனர். இது தொடர்பாக, சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். மூன்று மாதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இரண்டு முறை நெல்லை எஸ்.பி.,யிடம் புகார் அளித்தேன். பின்னர், இன்ஸ்பெக்டர் அழைத்ததால், சீவலப்பேரி காவல் நிலையம் சென்றேன்.அப்போது எஸ்.பி.,யிடம் புகார் அளித்ததை குறிப்பிட்டு, எஸ்.ஐ., சுதன் என்னை மிரட்டினார்.காற்றாலை இயந்திரங்களை எடுத்துச் செல்லும் லாரியை வழிமறித்து, தகராறு செய்ததாக பொய் புகார் பெற்று, காவல் நிலையத்துக்கு என்னை வரவழைத்த எஸ்.ஐ., என்னை கடுமையாக தாக்கினார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில், 'விவசாயி கஸ்பார் வில்லியத்தை, இன்ஸ்பெக்டர் சுதன் தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது, ஆணையத்தின் விசாரணையில் உறுதியானது. 'எனவே, பாதிக்கப்பட்ட கஸ்பார் வில்லியத்திற்கு, தமிழக அரசு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இத்தொகையை எஸ்.ஐ., சுதனிடம் வசூலித்துக் கொள்ளலாம்' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை