உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்கணும்

 பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்கணும்

இந்தியாவில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசித்து, கடந்த 2023ல் மட்டும் 3.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 1990ல், இதே முறையில் 2.17 லட்சம் பேர் உயிரிழந்தனர். பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பும், சிகரெட் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள், பெரிய அளவில் அதிகரித்தது கவலை தருகிறது. குறிப்பாக, ஆண்கள் இறப்பு 61.74 சதவீதம், பெண்கள் இறப்பு 38.35 சதவீதம் அதிகரித்துள்ள தாக, ஆய்வறிக்கை கூறுகிறது. பிறர் விடும் புகையை சுவாசிக்கும் குழந்தைகள், பெண்கள், மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த 2008 முதல், 2024 வரை, 3.89 லட்சம் பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இச்சட்டம் எவ்வளவு அலட்சியமாக அமல்படுத்தப்படுகிறது என்பதை உணரலாம். இனியாவது பொது இடங்களில் புகைப்பதை, அரசு தடுக்க வேண்டும். - அன்புமணி, தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி