உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசின் நடவடிக்கையால் சென்னையில் பெரும் பாதிப்பு தவிர்ப்பு; துணை முதல்வர் உதயநிதி

அரசின் நடவடிக்கையால் சென்னையில் பெரும் பாதிப்பு தவிர்ப்பு; துணை முதல்வர் உதயநிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் 329 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u4blgd1b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 12 இடங்களில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் போர்க்கால அடிப்படையில் மழைநீரை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை நீர் தேங்கும் இடங்களில் வெள்ள நீரை அகற்றுவதற்காக 1700 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதியம் 1 மணி முதல் மழையின் காரணமாக 27 மரங்கள் விழுந்தன. அவை உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. கணேசபுரம் சுரங்கப்பாதையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்புகள் வைத்து அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.சென்னை மாநகராட்சி சார்பில் 329 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களுக்கு உணவு வழங்க 120 சமையற் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரையில் தாழ்வான பகுதிகளில் இருந்த 193 பேர் மீட்கப்பட்டு, 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இன்று காலையில் 8 ஆயிரத்து 500 பேருக்கும், மதியம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 700 பேருக்கும் உணவு வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் உத்தரவுப்படி, 386 உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. மழை, வெள்ளம் மீட்பு பணிகளில் 22 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.கழிவுநீர் மற்றும் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணியில் சென்னை குடிநீர் வாரியம் ஈடுபட்டு வருகிறது. பாதாள சாக்கடை அடைப்பை சீர்செய்ய 524 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் தலைமையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னையில் பெருமளவு பாதிப்பு ஏற்படவில்லை.புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க இருப்பதால், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அநாவசியமாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். புயலை எதிர்கொள்ளும் அரசுக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

சூரியா
டிச 01, 2024 06:25

நாலாயிரம் கோடியில் விடிகாலை அமைக்காமல், அங்கங்கே நீர்த் தொட்டியாகக் கட்டி, கொசு வளர்க்கிறார்கள். அடையாறு ஆற்றிலிருந்து 8000 க. அடி நீரைத் திறந்து விட்டதையும், நமது குடி நீர் ஆதார ஏரிகள் பாதி அளவே நிரம்பி உள்ளன என்றச் செய்தியும் அரசின் இயலாமையைக் காட்டுகிறது.


ராஜ்
டிச 01, 2024 03:39

THATHA மாதிரி யாராலும் பேச முடியாது. ...பஸ் கட்டனத்த உயர்த்திவிட்டு கட்டணம் மாற்றி அமைக்க பட்டுள்ளது என்று சொல்லுவார்.


subramanian
நவ 30, 2024 22:57

திருட்டு பயல்.மத்திய அரசின் நாலாயிரம் கோடி ரூபாயை கொள்ளை அடித்தவர்கள்.


adalarasan
நவ 30, 2024 22:15

சென்னையில் சராசரி7 cm மேன்ஸ்ஜ்தான் பெய்துஇருக்யாக,புயல் வேறு திசை நோக்கி சென்றுவிட்டது. இதற்கே,pala இடங்களில், ரோடு மூழ்கி மக்கள் அவதி படுகின்றனர், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி 2பேர் பலி போட்டிற்கு வேலை இல்லை. தேங்க்ஸ் for நடவடிக்கை???


Bhaskaran
நவ 30, 2024 21:23

கண்டிப்பாக ஐந்தாயிரம் மழைநிவாரணம் உண்டு. எப்படியும் தேர்தலை அட்வான்ஸ் செய்யும்போது vaakku -களுக்கு அட்வான்ஸ் கொடுத்ததாக வைத்துக் கொள்ளலாம்


Venkatesh
நவ 30, 2024 21:15

இப்படி கூச்சமே இல்லாமல் பேசும் சிலர் என்ன சாப்பிட்டு இந்த மானங்கெட்ட ஒரு நினைப்பில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வந்த வழி அப்படி


கத்தரிக்காய் வியாபாரி
நவ 30, 2024 21:03

அரசின் திராவிட கொள்கையை வருண பகவானிடம் சொல்லி புரியவைத்து அவர் காலில் விழுந்து கெஞ்சி அனுப்பி வைத்து பெரும் பாதிப்பு தவிர்ப்பு.


Ramesh Sargam
நவ 30, 2024 20:51

புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அதற்குள் இவர்களின் தற்பெருமை நாடகம் ஆரம்பித்துவிட்டது. இவர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை.


தமிழன்
நவ 30, 2024 20:38

மழை தண்ணீர் வடிந்து விட்டது என சொல்லும் அமைச்சர் - மக்கள் கண்ணீர் விடியவில்லை.. என்று மக்கள் சொல்வது கேட்கவில்லையா.. இரவில் தானே உதயநிதி வெளியே வருவார்.. அதுக்குள்ள இவரை யாருங்க எழுப்பி விட்டாங்க..


தமிழன்
நவ 30, 2024 20:35

அமைச்சர் சேகர் பாபு அல்லது மற்ற அதிகாரிகள் இல்லாமல் அமைச்சர் உதயநிதியை தனியாக பத்திரிகையாளர்கள் சந்தித்து கேள்வி கேட்க வேண்டும். முன்பே கேள்விகளை எழுதி கொடுக்க கூடாது அப்போ தெரியும் அமைச்சர் உதயநிதியின் அறிவும் திறமையும். திமுக இல்லாத தமிழகம் படைப்போம். திமுகவை அரசியல் வரலாற்றில் இருந்து அடியோடு ஒழிப்போம் என உறுதி மொழி எடுத்துக் கொள்வோம்.


SRIRAM
நவ 30, 2024 21:04

அவ்வளவு கஷ்டப்படவேண்டுமா....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை