உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்நாடக எழுத்தாளருக்கு விருது; தமிழக அரசு அறிவிப்பு

கர்நாடக எழுத்தாளருக்கு விருது; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மகாதேவாவுக்கு வைக்கம் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. 5 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு சான்றிதழ், பதக்கம் ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வைக்கம் விருது சமூகநீதி நாளான செப்டம்பர் 17ம் தேதி தமிழக அரசால் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி 2024ம் ஆண்டிற்கான வைக்கம் விருது கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவநூர மஹாதேவா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாதெமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவநூர மஹாதேவாக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் கேரளா மாநிலம் வைக்கத்தில் நாளை (டிச.,12) நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்பு விழாவில் வழங்குவார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankaran
டிச 11, 2024 21:29

வைக்கத்துக்கும் ஈ வே ரா வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ... சோசியல் மீடியாவில் நிறைய பேர் இந்த விஷயத்தை பற்றி பேசியாச்சி ... திராவிடர்கள் ஊரை ஏமாற்றுகிறார்கள் ...


Naga Subramanian
டிச 11, 2024 14:50

இவர் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவராக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை