உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்களில் நேரலைக்கு அனுமதி வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவு

கோவில்களில் நேரலைக்கு அனுமதி வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவு

புதுடில்லி: ராமர் கோவில் திறப்பை தனியார் கோவில்கள், மடங்கள், திருமண மண்டபங்களில் நேரலை செய்ய போலீசார் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 'கோவில்களில் நேரலைக்கு அனுமதி வழங்க வேண்டும்' என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.உ.பி., மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள கோவிலில் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு நடக்கிறது. கர்ப்ப கிரகத்தில் பால ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் கண்களை மூடியுள்ள திரை அகற்றப்பட்டு, விக்ரஹம் உயிர்ப்பு பெறும் உச்சகட்ட சம்பிரதாயம் இது. இதனை பல இடங்களில் நேரலையாக ஒளிபரப்ப கோவில் நிர்வாகம், பா.ஜ., கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sledeyr1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், தமிழக அரசும், போலீசாரும், ராமர் கோவில் திறப்பை நேரலை செய்யவோ, கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை செய்யவோ அனுமதி மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் மண்டபத்தில் பஜனைகள் மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், 'ராமர் கோவில் திறப்பை தனியார் கோவில்கள், மடங்கள், திருமண மண்டபங்களில் நேரலை செய்ய போலீசார் அனுமதி தேவையில்லை. தனியார் கோவில்களில் நேரலை செய்யவோ, பூஜைகள் செய்யவோ கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும். கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளலாம்' என உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் பா.ஜ., சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள், ''தமிழக கோவில்களில் நேரலை செய்ய சட்டப்படி அனுமதி அளிக்கவேண்டும். சட்டப்படி எதற்கு அனுமதி வழங்கலாமோ, அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். வாய்மொழி உத்தரவை ஏற்று போலீசார் செயல்படக்கூடாது'' எனக் கூறி வழக்கு குறித்து தமிழக அரசு ஜன.,29க்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

Naga Subramanian
ஜன 23, 2024 06:46

ஜிஸியா வரி மட்டும்தான் பாக்கி. அதுவும் வந்துவிட்டால், நாம் அனைவரும் 1483ம் வருடங்களுக்குச் சென்று விடலாம்.


sankaranarayanan
ஜன 22, 2024 23:54

திராவிட மாடல் அரசுக்கு இது ஒரு நெத்தி அடி இதயம் கேட்டு அறநிலையத்துறை அமைச்சர் இன்னும் பதவியில் இருக்க வேண்டுமா இந்துநாட்டில் இந்துக்களுக்கு நில்லாத உரிமையா?


Kasimani Baskaran
ஜன 22, 2024 23:40

திராவிடமே டோட்டல் ஏமாற்று வேலை. கடவுள் மறுப்பு என்று ஆரம்பித்து இன்று இந்துக்களுக்கு மட்டுமே எதிரிகள் இவர்கள். சிறுபான்மையினர் என்றால் பல்லை இளித்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யவிட்டு விடுவார்கள் (குண்டு வைப்பது முதற்கொண்டு). தமிழகத்துக்கு மட்டுமல்லை சிறுபான்மையினர்களுக்கும் கூட எதிரிகள் இவர்கள். தமிழனுக்கு முன்னேறத்தெரியும் - குறிப்பாக திராவிடர்கள் வந்து தமிழனை முன்னேற்றத்தேவையில்லை. எவனும் ஏழை கிடையாது. பல்லாயிரம் கோடிக்கு அதிபதிகள்.


Nachiar
ஜன 22, 2024 20:20

ராம் ராஜ்யத்திற்கு சங்க நாதம். தீயவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு சங்கு ஊதல். ஜெய் பாரத் ஜெய் சிவராம்


anbu
ஜன 22, 2024 19:27

குடும்ப ஆட்சியில் இப்படித்தான் நடக்கும். எதிர்க் கட்சியான அதிமுக அவர்களது பங்காளிகள். அவர்களும் அவ்வாறே. போலி மத சார்பின்மை.


Anbuselvan
ஜன 22, 2024 19:25

அட்றா சக்கை. அட்றா சக்கை. அட்றா சக்கை.


Nachiar
ஜன 22, 2024 18:29

ஸ்ட்டால் (stall) செய்யப்பட்ட ஸ்டாலின் இந்து விரோத முயர்ச்சிகள் . ஜெய் சிவராம்


Saravanan
ஜன 22, 2024 17:19

இனிமேல் முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின் என்று அழைக்க வேண்டாம் ஸ்டாலின் என்கிற அவுரன்கஸிப் என சுருக்கமாக அழையுங்கள்


vbs manian
ஜன 22, 2024 16:50

யூதர்களை பந்தாடிய ஹிட்லரின் ஞாபகம் வருகிறது.


வெகுளி
ஜன 22, 2024 16:26

கழக அரசு நேரடி ஒளிபரப்பு வழங்கியது என்று வெக்கமே இல்லாமல் இதிலும் ஸ்டிக்கர் ஒட்டி விடுவார்கள்....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை