உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு ஜாமின்

தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு ஜாமின்

மதுரை: கரூர் மாவட்டம் மாயனூரில் மணல் கடத்தியதாக அரவாக்குறிச்சி தி.மு.க., எம்.எல்.ஏ., கே.சி.பழனிச்சாமி மீது போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் ஜாமின் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், அவர் மனு செய்தார். மனு, நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், ரவி ஆஜராயினர். ஜாமினில் விட, அரசு வழக்கறிஞர் ராமர் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை