உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜிக்கு ஜாமின்: தி.மு.க., தலைவர்கள் சொல்வது என்ன?

செந்தில் பாலாஜிக்கு ஜாமின்: தி.மு.க., தலைவர்கள் சொல்வது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மோசடி வழக்கில் 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று(செப்.,26) சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. இது குறித்து தலைவர்கள் கருத்து பின்வருமாறு:முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,' செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7nx6hz8y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தியாகம் பெரிது!

கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தடை இல்லை

தி.மு.க., அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும் இல்லை. அமலாக்கத்துறை வேண்டுமென்றே இழுத்தடித்தார்கள். பா.ஜ.,வினர் இனிமேல் திருந்த வேண்டும். அவர்கள் அரசியல் தலைவர்கள் மீது போட்ட வழக்குகளில் எல்லாம் சுப்ரீம் கோர்ட் ஜாமினில் விடுதலை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணைக்கு ஒத்துழைக்கணும்!

'ஜாமினில் வந்துள்ள செந்தில்பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். நீதிமன்றம் செந்தில்பாலாஜி வழக்கை கவனித்துக்கொண்டிருக்கிறது' என பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மிகவும் மகிழ்ச்சி!

'15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சர் பொறுப்பு உள்ளிட்டவை குறித்து தலைமை முடிவு செய்யும்' என்றார் அமைச்சர் முத்துசாமி

கடும் போராட்டம்!

'15 மாத கால சமரசமற்ற கடும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. துயரம், தனிமையை அசைக்கமுடியாத மன உறுதியோடு எதிர்கொண்டு வென்ற செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துக்கள்' என காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி கூறினார்.

மகிழ்ச்சி அளிக்கிறது

'செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு சட்டப் போராட்டங்களை செந்தில் பாலாஜி சந்தித்த பின் அவருக்கு ஜாமின் கிடைத்துள்ளது' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சட்ட போராட்டம்

அமைச்சர் ரகுபதி நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம்கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கி இருப்பது மகிழ்ச்சியான செய்தி ஆகும். கடந்த 15 மாதங்களாக அவர் சட்ட போராட்டம் நடத்தி வந்துள்ளார். அவரை போல பொறுமையாக சட்டப்போராட்டம் நடத்திய ஒருவரை பார்க்க முடியாது. சிறையில் இருந்து கொண்டு அமைச்சர் பதவி கூட எனக்கு வேண்டாம் என சொல்லி மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு ஜாமின் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. வழக்குகளில் அவர் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

sundarsvpr
செப் 28, 2024 19:25

ஸ்டாலின் மகிழ்ச்சி அடைவதற்கு காரணம். உடனே விடுதலை கிடைத்திருந்தால் செந்தில் மேலும் ஊழல் செய்துஇருப்பார். தமிழ்நாட்டிற்கு புதிய மாற்று அரசு கிடைத்து இருக்கும். நல்ல காலம் தி மு க விற்கு. பொறுத்தார் பூமி ஆழ்வார். செந்தில் தியாகம் கட்சியில் உரிய பதவி.


Matt P
செப் 28, 2024 02:43

திமுககாரங்க எல்லோருக்கும் மகிழ்சி தான். ...ஜோதிமணி சொல்றாங்க. தனிமையில் இருந்தாராம்...இனிமேலும் தனிமையில் தவிக்க விடாதீங்க ...யாராவது கூடவே இருங்க எப்போதும். ...திருடுவதும் கொள்ளையடிப்பதும் ஏமாற்றுவதும் தவறில்லை என எவ்வளவு ஆணித்தரமான திமுக காரங்க சொல்கிறார்கள். செந்திலு ஏமாற்று பேர்வழி ஏற்கெனெவே ஸ்தாலின் மேடையில் அறிவிச்சு தான் ஒப்புரவானவன் என இப்போதே காட்டிக்கொண்டார்


sankar
செப் 27, 2024 13:48

பத்து - இனிமேல் - இருபதோ அல்லது இருபத்து அஞ்சோ ஆகலாம் - யார் கண்டது - வக்கீல் பீஸுக்கு வேணுமே


N.Purushothaman
செப் 27, 2024 08:26

கொள்ளையடிச்சவன் ஜாமீன் வாங்க நீதிமன்றம் படிக்கட்டுகளை ஏறி இறங்கினால் அதுக்கு பேரு சட்ட போராட்டமாம் ? அவன் தியாகியாம் ....திருட்டு திராவிடனோட உருட்டு அடேயப்பா ......


Sureshkumar
செப் 27, 2024 14:55

உருட்டுலேயே உலக மகா உருட்டு.


Ramesh Sargam
செப் 26, 2024 21:59

அதனினும் பெரிது நீ அப்ரூவர் ஆகி எங்களை எல்லாம் மாட்டிக்கொடுக்காதது…???????


sankar
செப் 26, 2024 18:57

உள்ளே அனுப்பியவனே வரவேற்கும் நிலை கண்டு தமிழம் கைகொட்டி சிரிக்கிறது - பொறுத்திருந்து பதில்சொல்லும் காலம்


VENKATASUBRAMANIAN
செப் 26, 2024 18:48

இவரை தியாகி ஆக்கிவிட்டார்கள் ஒருவர் கூட இவர் ஊழல் செய்யவில்லை என்று கூறவில்லை. இதுதான் திராவிட மாடல்


vbs manian
செப் 26, 2024 18:26

பவள விழாவில் கொண்டாடுவார்களா.


vbs manian
செப் 26, 2024 18:25

நீதிமன்றம் மீது நம்பிக்கை நாள் தோறும் குறைந்து கொண்டே வருகிறது.


sankar
செப் 26, 2024 17:52

எமெர்ஜென்சியில் உண்மையிலே ஜெயிலுக்கு போனவர்களும் இருக்கிறார்கள் - ஜெயிலுக்கு போனேன், ஜெயிலுக்கு போனேன் என்று சொல்லும் கப்ஸாக்களும் - அந்துபோன ரீல்ஸ்ம் இருக்கின்றன


புதிய வீடியோ