உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எய்ட்ஸ், புற்று நோய் சிகிச்சை விளம்பரங்களுக்கு தடை

எய்ட்ஸ், புற்று நோய் சிகிச்சை விளம்பரங்களுக்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'எய்ட்ஸ், புற்று நோய், நீரிழிவு உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துவதாக விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் ஒய்.ஆர்.மானேக்சா எச்சரித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான ஒருவழக்கில் உச்ச நீதிமன்றம் சில ஆணைகளை பிறப்பித்துள்ளது. அதன்படி ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.பார்வையின்மை, புற்று நோய், எய்ட்ஸ், பக்கவாதம், இதய நோய்கள், சிறுநீரக கற்கள், நரம்பு மண்டல கோளாறுகள், குடல் அழற்சி, ஆஸ்துமா உள்ளிட்ட 56 நோய்களை குணப்படுத்துவதாக, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எங்கும் விளம்பரம் செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி வெளியிட்டால், அது நீதிமன்ற அவமதிப்புக்குரிய செயல் மற்றும் தண்டனைக்குரிய குற்றம்.இது போன்ற விளம்பரத்தை பார்த்தால் gmail.comஎன்ற மின்னஞ்சலில் புகார் அளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

D.Subbukkutti
மே 31, 2025 19:09

அவசியம் மிக அவசியம்


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 30, 2025 15:40

அப்படியே இந்த இம்சை மன்னர் ஆட்சியின் சாதனை என்ற விளம்பரத்தையும் தடை செஞ்சா நல்லது...


chandrasekar
மே 30, 2025 09:44

ஏனென்றால் ஆங்கில மருத்துவர்கள் அடிக்கும் கொள்ளை நின்று விடுமே.


மருந்துபாபு
மே 30, 2025 08:17

இதெல்லாம் தீராத, குணப்படுத்த முடியாத வியாதின்னு முடிவுக்கு வந்துட்டாங்களா?


Kavitha Sivakumar SG
மே 30, 2025 07:46

why Gmail? There is no Gov domain to manage this?


GMM
மே 30, 2025 07:45

இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் சில பரிந்துரைகள் வழங்கியது. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் செய்ய தடை செய்து விதிகள் வகுத்து அரசாணை வெளியிட்டால் தான் நாடு முழுவதும் அமுல் படுத்த முடியும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் நேரடியாக மக்களை தண்டிக்க முடியாது. ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை