உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை: தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை: தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை போலீஸ் கமிஷனர், அங்கு இயங்கும் அனைத்து வாகனங்களிலும் மோட்டார் வாகன விதிகளை மீறி போலீஸ், வழக்கறிஞர், பிரஸ், டாக்டர் போன்று பதவிகளை குறிப்பதற்கான ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என தெரிவித்துள்ளார்.இந்த தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். மனுவில், சென்னையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை என பிறப்பித்த உத்தரவில் பல்வேறு குழப்பங்கள் உள்ளது. இந்த உத்தரவு சென்னைக்குள் மட்டும் பொருந்துமா? அல்லது மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்துமா? என விளக்கப்படவில்லை. வாகனங்களின் முன்பக்கம், பின்பிக்க கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஸ்டிக்கர்களாக ஒட்ட தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று (மே 09) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனு மீதான விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Paramasivam Ravindran
மே 10, 2024 11:26

ஐயா, கருப்புசாமி துணை, டிவிஎஸ் பார்சல் சேவை, போர்ட்டர், மஹிந்திரா, சுசூகி, இப்படி பல விதங்களில் வண்டியில் எழதலாமா அல்லது அதுவும் ஆகாதா? தயாரிப்பு நிறுவணத்தின் பெயர் எழுதப்பட்ட இருக்குமே?? அதுவும் ஆகாதா?


rama adhavan
மே 09, 2024 23:16

அதே போல் கொடிகள்?? இந்திய தேசிய கொடி தவிர வேறு எந்த கொடியையும் அனுமதிக்க கூடாது :


sankaranarayanan
மே 09, 2024 19:14

திராவிட மாடல் அரசு எல்லா பொருட்களிலும் எல்லா செயல்பாடுகளிலும் மத்திய அரசு கொண்டுவரும் எல்லா பயன்பாடுகளிலும் ஸ்டிக்கர் ஒட்டியே பழகிவிட்டார்கள் இனி அதை மாற்ற வேண்டுமானால் ஒன்று உயர் அல்லது உச்ச நீதி மன்றங்கள்தான் ஆணை இடவேண்டும் இல்லையேல் வேறு ஆட்சி அமையவேண்டும்


Lion Drsekar
மே 09, 2024 16:22

ஸ்டிக்கர் இருக்கட்டும் முதலில் தேசியக்கொடியைக் கண்டால் நமக்கு ஒரு மதிப்பும் மரியாதையையும் தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றும் ஆனால் கட்சிக்கு கொடியைக் கண்டால் காவல் துறையே நடுங்கும் அளவுக்கு இருப்பதால் , முதலில் இதை தடை செய்யவேண்டும் அது போல் செல்லும் ஒலி, ,, வேகம் ஏதோ அவர்கள் தலைவர்கள் அந்த வண்டியில் பயணம் செய்வது போல் நினைத்து செல்வதால் எத்தினை விபத்துக்கள் அதே போன்று முக்கிய பிரமுகர்கள் பின்னால் மக்கள் வரிப்பணத்தில் செல்லும் வாகனங்களைக்ள் கட்டுபப்டுத்தவேண்டும் எவ்வளவு வாகனங்கள், எவ்வளவு பெட்ரோல் , எவ்வளவு வரிப்பணம் பல லட்சம் கோடி மிச்சமாகுமே ? இதற்க்கு நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த இந்த பதவிக்கு இதனை வாகங்கள்தான் அணிவகுக்கவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவேண்டும் படிக்கும்போது ஏதோ சிறுபிள்ளைத்தனம் போல் தோன்றலாம் ஆனால் தினம் இனம் பல ஆயிரம் வண்டிகள் செல்வதைக் கணக்கிட்டால் மக்கள் வரிப்பணம் ஒவ்வொரு முடியாட்சியிலும் பல லட்சம் கோடியைத் தாண்டும் இவைகளை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது வந்தே மாதரம்


Bneutral
மே 09, 2024 16:08

People who are in that profession have right to paste stickers, whats problem of this pigwho made/making this complaint to court whats the problem of mentioning advocate symbol in his/her own vehicle fine these kinds minimum lakhs as fine its their vehicle , have the right to write anything, unless misusing complaint can be registered specifically


sethu
மே 09, 2024 16:08

திமுக பதவியில் இல்லாதபோது பொதுமக்களுக்கு நல்லது செய்வதாக சொல்லி பல கேசுகளை போட்டு கோர்ட்டமூலம் அதிமுக அரசை செயல்படாமல் செய்யும் ,ஆனால் இப்போது இவனுகளே ஒரு திட்டம் வகுப்பானுக பின்னாடியே இவனுகளோட ஆட்களே கேசும்போடுவானுக பின் இவனுகளே கோர்ட்டையும் செயல்படாமல் செய்வானுக


M S RAGHUNATHAN
மே 09, 2024 16:02

எதற்காக toll plaza வில் கட்சிக் கொடி பறக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க படுவதில்லை அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், நீதிபதிகள் சொந்த வேலையாக செல்லும்போது அவர்கள் செல்லும் வாகனங்களுக்கு ஏன் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது


ஆரூர் ரங்
மே 09, 2024 14:39

தனியார் கார்பரேட் நிறுவன காரில் முதல்வர் அரசுமுறைப் பணிகளுக்கு செல்வதை கேள்வி கேட்கமுடியுதா? தன்னிடம் கார் கிடையாது என்ற முதல்வர் அரசு வாகனத்தை ஏன் பயன்படுத்தவில்லைன்னு கோர்ட்டால் கேள்வியெழுப்ப முடியாதா?


GMM
மே 09, 2024 14:35

வாகன உரிமம் தருவது RTO போலீஸ் ஆணையர் ஸ்டிக்கர் தடை உத்தரவு போட முடியாது RTO, Collector போன்ற நிர்வாக அதிகாரிகளுக்கு உதவ தான் போலீஸ் திராவிடம் ஆட்சிக்கு வந்த பின், அமைச்சர், ஆளும் கட்சி வாய்வழி உத்தரவை போலீசார் நிறைவேற்றி வருகின்றனர் நிர்வாகம், மக்களுக்கு உதவுவது குறைவு தவறான முறை


vadivelu
மே 09, 2024 14:10

சுதந்திரம் அடைந்து வருடங்கள் ஆகி விட்டது, ஆட்சிக்கு வருபவர்களே திரும்ப திரும்ப ஆட்சிக்கு வருவதும் நடக்கிறது புதிது புதிதாக சட்டங்களை கொண்டு அந்த வண்ணம் இருக்கிறார்கள் கொண்டு வருகிறார்கள், சிறிது காலம் கழித்து மறந்து விடுகிறார்கள், திரும்பவும் ஜகொண்டு வருகிறார்கள்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி