உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளியேறும் வங்கதேசத்தினர் பஸ், ரயில்களில் கண்காணிப்பு

வெளியேறும் வங்கதேசத்தினர் பஸ், ரயில்களில் கண்காணிப்பு

சென்னை : திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து, வங்கதேசத்தினர் வெளியேறுவதால், அவர்களை கைது செய்ய, பஸ், ரயில் நிலையங்களில், போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள வங்கதேசத்தினர், மேற்கு வங்க மாநிலத்தவர் போல், போலி ஆவணங்கள் தயார் செய்து, தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்களில், பெரும்பாலானோர் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதும், பயங்கரவாத செயலுக்கு சதி திட்டம் தீட்டி வருவதும் தெரிய வந்துள்ளது. இதனால், மாநிலம் முழுதும் வங்கதேசத்தினருக்கு எதிராக, உள்ளூர் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 63 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து, வங்கதேசத்தினர் வெளியேறி வருகின்றனர். அவர்களை கைது செய்ய, பஸ், ரயில் நிலையங்களில், போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து போலீசார் கூறுகையில்,' பிப்., மாத இறுதிக்குள் வங்கதேசத்தினர் ஒருவர் கூட தமிழகத்தில் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Chidambarakrishnan K
ஜன 28, 2025 10:54

இப்பொழுது தான் போலீசுக்கு தெரிகிறதா இவர்கள் எல்லாம் வங்க தேசத்தினர் என்று? இவர்கள் நம் தமிழர்களின் வேலை வாய்ப்பை பரித்தபோது தெரிய வில்லையா? அப்போ தமிழன் என்றால் இழிச்ச வாயன்? திருப்பூரில் இருக்கும் மில்களுக்கு குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்ய ஆட்கள் கிடைத்தால் போதும். நம் நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் பற்றியோ, நாட்டின் பாதுகாப்புப் பற்றியோ கவலையில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை