உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வந்தே பாரத் ரயிலில் கொடுத்த உணவில் வண்டு; ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தெற்கு ரயில்வே நடவடிக்கை

வந்தே பாரத் ரயிலில் கொடுத்த உணவில் வண்டு; ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தெற்கு ரயில்வே நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்ற, வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு இருந்ததாக பயணி ஒருவர் புகார் அளித்தார். உணவு விநியோகம் செய்த நிறுவனத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.திருநெல்வேலி மற்றும் சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரயில் வாரத்துக்கு ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சென்றுக்கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில், பயணிகளுக்கு வழக்கம் போல் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில் சாம்பாரில் வண்டுகள் செத்து கிடந்துள்ளதை கண்டு பயணி ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பயணி ரயில்வே ஊழியர்களிடம் புகார் அளித்தார். ஆனால், இது வண்டு இல்லை, சாம்பாரில் உள்ள சீரகம் என்று ரயில்வே ஊழியர் மழுப்பல் பதில் அளித்தார்.இதையடுத்து, சீரகத்தில் எப்படி தலை, கால்கள், வால் அனைத்தும் இருக்கும் என அதிகாரிகளிடம் பயணிகள் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாம்பாரில் இறந்து வண்டுகள் மிதந்து இருப்பதை பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. வீடியோவில் ரயிலில் பயணம் செய்த பயணி, 'என் பெயர் முருகன், நான் நாங்குநேரியில் இருந்து வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்கிறேன். காலை உணவு வழங்கினர். அதில், சாம்பாரில் 3 வண்டுகள் இருந்தது. அதனை சக பயணாளிகளிடம் தெரிவித்தேன். தொடர்ந்து, இது குறித்து நான் ஊழியரிடம் கூறுகையில் அது வண்டு இல்லை, சீரகம் என்றேன் இதனையடுத்து, நாங்கள் அது வண்டு என்பதை உறுதி செய்ததை அடுத்து அவர்கள் ஒப்புக்கொண்டனர்.வந்தே பாரத் ரயிலில் உணவிற்காக மட்டும் ரூ.200 வசூல் செய்கின்றனர். மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இத்தைகைய ரயிலில் வழங்கப்படும் உணவு, பயனுள்ளதாக இல்லை. தரமான உணவை வழங்க வேண்டும். இது குறித்து மத்திய அமைச்சகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறினார்.

நடவடிக்கை

வண்டு இருப்பதாக கூறி, பயணி வெளியிட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து, உணவு விநியோகம் செய்த நிறுவனத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் தெற்கு ரயில்வே அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

K V Ramadoss
நவ 18, 2024 04:59

ரூ50000 உணவு சப்ளை செய்தவருக்கு அபராதம் விதித்தது ரயில்வே நிர்வாகம். அந்த உணவை பெற்றுக்கொண்ட பயணிக்கு ௭ன்ன நஷ்ட ஈடு கொடுத்தது ரயில்வே நிர்வாகம் ?


Yasararafath
நவ 17, 2024 18:08

தமிழ்நாட்டிற்கு வந்தே பாரத் ரயில் தேவையா?


Matt P
நவ 18, 2024 00:23

தமிழ்நாட்டுக்கு ரயிலே தேவையில்லை என்று சொன்னாலும் சொல்வீர்கள். நம்ம கருணாநிதி நினைவாவது ரயில் ஓடிட்டு இருக்கட்டுமே. தமிழ்நாட்டில் வந்தே பஆரத் ரயிலின் பெயரை கருணாநிதி ரயில் என்று மாற்ற திமுகவினர் போராட்டம் நடத்த வேண்டும். அவரு அப்பன் பெயரை வைக்காமல் வேறு யார் அப்பன் பெயர் இருக்க முடியும். எவ்வளவு நல்லது செஞ்சிருக்கார் தமிழ் ஆட்டு மக்களுக்கு.


D.Ambujavalli
நவ 17, 2024 17:32

இது கூட வலைத்தளங்களில் பரவி பெயரை முற்றும் சந்திக்கு இழுத்த பின்தான் 'நாங்களும் நடவடிக்கை எடுத்துவிட்டோம்' என்று காட்டத்தான் அந்த ஒப்பந்தக்காரர் 'கவனிப்பு' எவ்வளவு இருந்ததோ அதற்கேற்ப லேசான குட்டு


Matt P
நவ 17, 2024 13:14

சாம்பார் பொடியில் வண்டு வந்திருக்கும். அரிசியில் புழு, சாம்பார் பொடியில் வண்டு இருக்குதா என்று பார்த்து சட்டியில் சமையலாளர் கொட்டணும். சாம்பார் பொடி எங்கேயாவது இலவசமா கிடைச்சிருக்கு. யாபாரத்துக்கு லாபம் வரட்டுமே ஒப்பந்தக்காரர் வாங்கியிருக்கலாம். அபராதம் விதித்ததோடு மட்டும் இல்லாமல் ஒப்பந்தத்தை நிறுத்துவதும் தான் சரியா இருக்கும்.


Ramesh Sargam
நவ 17, 2024 12:07

வந்தே பாரத் ரயிலில் வண்டு பாத் சாதம்…???


Sivaswamy Somasundaram
நவ 17, 2024 11:56

வண்டே பாரத்?


Ramesh Sargam
நவ 17, 2024 11:45

சைனா காரணா இருந்தா அப்படியே சாப்பிட்டிருப்பான்.


Srinivasan Krishnamoorthi
நவ 17, 2024 11:43

சீனாவில் இப்படி ஆனால் பயணி அதிக பணம் கொடுத்திருக்க நேரிட்டிருக்கும்.


theruvasagan
நவ 17, 2024 11:33

ரயில் ஆகட்டும் விமானம் ஆகட்டும் எல்லாவற்றிலும் தரம் குறைந்த சுவை இல்லாத உணவுகளே அதிக விலைக்கு வழங்கப்படுகின்றன. இதுவரை எந்த அரசாசங்கமும் இதை சரி செய்ய அக்கறை எடுப்பதில்லை


Barakat Ali
நவ 17, 2024 11:23

இதிலுமா அரசியல் என்று சக வாசகர்களைக் கடிந்து கொள்ளும் அடிமைகள் கூட இதற்கும் ரெயில்வே மந்திரியை இழுப்பது வேடிக்கை ... அவற்றில் ஒரு அடிமை இதில் முதல்வர் / துணை முதல்வர் எங்கே வர்றார் என்று சக வாசகர்களை நோக்கி அழுதுகொண்டே கேட்பது மகா காமெடி ..... அந்த அடிமையும் இதில் அரசியல் செய்திருக்கிறது .....


புதிய வீடியோ