உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிச்சைக்காரர்கள் கணக்கெடுப்பு சென்னையில் துவக்கம்!

பிச்சைக்காரர்கள் கணக்கெடுப்பு சென்னையில் துவக்கம்!

சென்னை: சென்னை மாநகராட்சி பிச்சைக்காரர்கள் மற்றும் வீடற்றவர்களை கண்டறிய கணக்கெடுக்கும் பணியை துவக்கியுள்ளது. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க் உடன் இணைந்து, கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.பிச்சைக்காரர்கள் மற்றும் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு இருப்பிடம் ஏற்படுத்திக் கொடுப்பது இதன் முதன்மையான நோக்கமாகும். இந்த கணக்கெடுக்கும் பணி மார்ச் வரை நடைபெறும். 200 வார்டுகளிலும் கணக்கெடுக்கும் பணி நடக்க உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: 2018ம் ஆண்டின் கணக்கெடுப்பு படி, 11 ஆயிரம் பேர் வீடு இல்லாமல் உள்ளனர். 2022ம் ஆண்டு மாநகராட்சி நடத்திய ஆய்வில் 10,300 பேர் உள்ளனர். 49 இரவு தங்குமிடங்களில் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். கடந்த கால ஆய்வுகளில், வீடற்றவர்களில் 50% பேர் பிராட்வே, பாரிஸ், ராயபுரம் மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில் குவிந்திருப்பதைக் கண்டறிந்தோம். சென்னைக்கு 83 தங்குமிடங்கள் தேவை. ஆனால் 53 மட்டுமே உள்ளன.மனநலம் இல்லாதவர்களில் சிலர் முழுநேர பிச்சைக்காரர்களாக இருந்தாலும், பலர் இரவில் தெருக்களில் வசிக்கின்றனர். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியங்களில் நிதி உள்ளது. அவற்றைக் கொண்டு இவர்களுக்கு உதவி செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Indhuindian
பிப் 05, 2025 19:15

லஞ்சம் வாங்குபவர்களையும் மறக்காமல் சேர்க்கவும். பிச்சைக்காரர்களால் பொது மக்களுக்கு ஆக வேண்டிய வேலை ஒன்றும் இல்லை ஆனால் லஞ்சம் வாங்குபவர்கள் அது யாராக இருந்தாலும் மிகவும் மோசமானவர்கள். பொது மக்களின் எதிரிகள்


V. SRINIVASAN
பிப் 05, 2025 18:08

தாம்பரம் டு பீச் ட்ரைனில் நிறைய பிச்சைக்காரர்கள் வருகிறார்கள் அதே போல் சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர், அரக்கோணம் எலெட்ரிக் ட்ரைனியில் நெறைய வருகிறார்கள்


Perumal Pillai
பிப் 05, 2025 17:13

The person on the left in the picture looks more or less like the famous Italian Raul Vinci aka Salman Taseer Jr.


Rajan A
பிப் 05, 2025 16:38

இதில் மாதா மாதம் 1000 வாங்குபவரையும் சேர்ப்பார்களா? அது தான் சமூக நீதி


Suppan
பிப் 05, 2025 15:54

அறுபதுகளில் கருணா பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் என்று ஆரம்பித்து அதற்கு பல லட்சம் அட்டைகளை அச்சடித்து கழகக் கண்மணிகளுக்கு விற்கச்சொல்லி கொடுத்தார். அந்த அட்டைகளில் தொடர் எண் என்று எதுவும் கிடையாது. எவ்வளவு அட்டைகள் அச்சடித்தார்கள், எவ்வளவு விற்கப்பட்டது என்ற கணக்கு கிடையாது. கண்மணிகள் புகுந்து விளையாடினார்கள். அப்பொழுது ஊழலுக்கு போடப்பட்ட அச்சாரம் இன்றும் தொடர்கிறது...அது சரி அந்தத் திட்டம் என்ன ஆயிற்று?


Rajan A
பிப் 05, 2025 16:40

இப்ப 2.0னு அச்சடிக்க போறாங்க. ஐடியா கொடுத்து விடாதீர்கள்


Rajarajan
பிப் 05, 2025 12:24

அரசு பொது மருத்துவமனைகள், சிக்னல், பேருந்து நிலையங்கள் / பேருந்து நிறுத்தங்கள் / மேம்பாலங்கள் அடியில் / நடைபாதைகள் என கணக்கெடுத்தால் உண்மை தெரியும். இதுதவிர, நடமாடும் பிச்சைக்காரர்களை, பஜார் போன்ற பகுதிகளில் எளிதில் கண்டுபிடிக்கலாம்.


மண்ணாந்தை
பிப் 05, 2025 11:57

அவர்களில் ஜாதிவாரி மதவாரி கணக்கெடுப்பு செய்து பாருங்களேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை