மேலும் செய்திகள்
தவெக விஜய்க்கு ராஜபக்சே மகன் வாழ்த்து
3 hour(s) ago | 1
யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்
10 hour(s) ago | 21
கூடலூர்: பெங்களூரு, உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, தமிழக - கர்நாடக எல்லையான, முதுமலை கக்கநல்லா சோதனை சாவடியில், தமிழக போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பிரபல ஹோட்டலில், நேற்று, மதியம் குண்டுவெடித்தது. சம்பவத்தில், 10 பேர் காயமடைந்தனர். சம்பவத்தை தொடர்ந்து, கர்நாடக போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழக போலீசார், தமிழக - கர்நாடக எல்லைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.அதன்படி நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் ஒட்டிய தமிழக - கர்நாடகா எல்லையான கக்கநல்லா போலீஸ் சோதனை சாவடியில், கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டு, வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். இப்பணிகளை கூடலூர் டி.எஸ்.பி., வசந்தகுமார் ஆய்வு செய்தார்.
3 hour(s) ago | 1
10 hour(s) ago | 21