உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெங்களூரு - எர்ணாகுளம் நவம்பரில் வந்தே பாரத் ரயில்

பெங்களூரு - எர்ணாகுளம் நவம்பரில் வந்தே பாரத் ரயில்

சென்னை:'பெங்களூரில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக, கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு, 'வந்தே பாரத்' ரயில், வரும் நவம்பரில் இயக்கப்படும்' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். தெற்கு ரயில்வேயில் தற்போது, 11 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்களை இயக்க, ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து தமிழகம் வழியாக கேரள மாநிலம் எர்ணா குளத்துக்கு, புதிய வந்தே பாரத் ரயில் சேவை துவக்க கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளதாவது: பண்டிகை காலத்தை ஒட்டி, பல்வேறு மாநிலங்களுக்கு இடையே, 488 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பயணியர் தேவை உள்ள முக்கிய வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பெங்களூரில் இருந்து கோவை, திருப் பூர், ஈரோடு, சேலம் வழியாக, கேரள மாநிலம் எர்ணா குளத்துக்கு, புதிய வந்தே பாரத் ரயில், வரும் நவம்பர் இரண்டாம் வாரத்தில் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை